உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்குலோத்துங்க சோழன்

பழியிகந்து கொடுத்த புகழின் செல்வியும் வாளா ரொண்கண் மடந்தைய ரீட்டமும் மீளாது கொடுத்த வெங்கரி நிரையும் கங்கமண் டலமும் சிங்கண மென்னும் பாணியிரண்டு மொருவிசைக் கைக்கொண் டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங் கொள்ளத் திருவுளத் தடைத்து வெள்ளம் வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும் தந்திர வாரியு முடைத்தாய் வந்து வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்

ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி வெரிநளித் தோடி யரணெனப் புக்க காடறத் துடைத்து நாடடிப் படுத்து மற்றவர் தம்மை வனசரர் திரியும் பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற விசயத் தம்பந் திசைதொறு நிறுத்தி

முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு மத்தவெங் கரிபடு மய்யச் சையமும்

கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட்

டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள

சாவே றெல்லாந் தனிவிசும் பேற

மாவே றியதன் வரூதினித் தலைவரைக்

குறுகலர் குலையக் கோட்டா றுட்பட

நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள்

வீரசிம் மாசனந் திரியவிட் டருளி

வடதிசை, வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்

கலிங்க மேழுங் கனலெரி பரப்ப

விலங்கல் போல விலங்கிய வேந்தர்

விட்டவெங் களிற்றோடு பட்டுமுன் புரளப்

பொருகோ பத்தொடு போர்முக மதிர

வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட

எங்க ராய னிகலவ ரேச்சணன் மாப் பிறளா மதகரி யிராசணன் தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி

81