உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன்

போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி

என்றிவ ரனைவரும்

வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர்

கருந்தலை யொடுவெண் ணிணங்கழு கோடு பருந்தலைத் தெங்கணும் பாப்ப வுயர்த்துக் கருங்கட லடையத் தராதலந் திறந்து கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல் ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல வீரமும் தியாகமும் விளங்கப் பார்தொழச் சிவனிடத் துமையெனத் தியாக வல்லி உலக முடையா ளிருப்ப வவளுடன் கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலதம் ஏழிசை வல்லபி யேழுலகு முடையாள் வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந்

திருமா லாகத்துப் பிரியா தென்றும்

திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து

வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான

திரிபுவன சக்கரவர்த்திகள்

ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு -

(மூன்றாம் மெய்க்கீர்த்தி)

3. புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப

நிலமக ணிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதர விக்கலன் சிங்கணன் மேல்கடற் பாயத் திக்கனைத் துந்தன் சக்கர நடாத்தி

விசயாபி டேகம்பண்ணி வீரசிம் மாசனத்துப் புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய கோவி ராச்கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு-