உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

சேர்க்கை – 3

திருவைகாவூர்க் கல்வெட்டு

(1)

ஸவஸ்திஸ்ரீ

புகழ்மாது விளங்க ஜெயமாதுவிரும்ப

நாமகள்நிலவ மலர்மகள்புணர

உரிமையிற்சிறந்த மணிமுடிசூடி

மீன்வர்நிலைகெட வில்லவர்குலை(2)தர ஏனைமன்னவர் இரியலுற்றிழிதரத்

திக்கனைத்துந்தன் சக்கரநடாத்தி

வீரசிங்காசனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிந் தருளிய கோவிராஜ (3) கேசரிவர்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜ வளநாட்டுப் பாவைசுற்றுப்பூண்டி (4) பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரான வன நாடுடையார் உலகுய்யவந்த சோழவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவை காவுடை (5)ய மகாதேவர் கோயில்முன்பு இஷ்டிகையாய் ஜீரணித்தமையில் இக்கோயில் இழிச்சித்திருக் கற்றளியாகச் செய்கைக்கு யாண்டு முப்பத்திரண்டாவ(6) து விண்ணப்பஞ் செய்து இஷ்டிகை இழிச்சி வித்துத் திருக்கற்றளியும் திருவிடைக் கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்தேவ தானமான (7) நிலத்து நெல்லுதிருப்படிமாற்றுக்கும் நிபந்தத் திற்கும் போதாமையில் தேவதானம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய்ய வந்த சோழவள (8) நாட்டு விறை கூற்றத் துக்களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு. ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதானமா (9) க இடுவித்து நிவந்தஞ் செல்லப்பண்ணுவித்தார் ராஜராஜ வளநாட்டுப் பாவை சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன்