உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

89

சிவலிங்க வழிபாட்டின் தனிச்சிறப்பு

மெய்யன்பர்களே!

பலவிதமான தெய்வ வழிபாடுடைய இந்துக்களில் பலருக்கும், எந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லா மூர்த்தி களையும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது தெரியா ருக்கிறது. அதைப் பலரும் அறியும்படி தெரிவிக்கவே. சிவன் கோவில்களில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தைத்தவிர வேறு பிரதிஷ்டை ஒன்றுமின்றி அமைத்துக்காட்டி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

1. சிவலிங்கத்தில் பிரம்ம, விஷ்ணு, சிவ பாகங்கள் ஆகிய மூன்றும் அமைந்திருப்பது.

சிவலிங்கம் மூன்று

கூறுகளுடையன.

அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்தியபாகம் எட்டுப் பட்டமுடைய அட்டகோண வடிவமாய், வாமை, சேஷ்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமனி, சர்வ பூத தமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும். அதனோடுபொருந்த இருக்கும் ஆவுடை எனப்படும், மனோன் மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகா விஷ்ணுவின் நவசக்திகளாகி, நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் 'ஸ்திதி' கர்த்தரான விஷ்ணுபாகத்தை உணர்த்துவ தாகும். அரன் என்பதன் பெண்பாலே அரி என்பதாகும். அதனாலேயே 'அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாரனார்க்கே' என்று திருநாவுக்கரசு நாயனாரும், திருமழிசையாழ்வார் தமது இயற்பாவிலே மாதாயமாலவனை மாயவனை, என்றும் அருளிச் செய்திருக்கின்றார்கள். அதனால்தான் நமது அப்பனாகிய சிவபெருமானது இடப்பாகம். நமது அம்மையாக விளங்கும் மகா விஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமா