உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

மகேஸ்வரன், அர்த்தனாரி, சங்கர நாராயணன், என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங்களாகவும், அமைந்து திகழ்கின்றன. அதற்கு மேலுள்ளபாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல் எனப்படும் சம்ஹாரம், மறைத்தல் எனப்படும் த்ரௌபவம், அருளல் எனப்படும் அனுக்கிரஹம் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகமாகும். பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்குள்மறைந்து ஒடுங்கி நிற்கும், நீருக்கு அதிபதியான விஷ்ணுபாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்துநிற்கும். நெருப்புக்கதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதிபோன்று ஜொலித்துக்கோண்டிருக்கும். இம் மூன்றும் சேர்ந்த அருவமும், உருவமுமற்ற ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவே சிவலிங்கம் ஆகும் .ஆகவே சிவலிங்கத்தை வழிப்பட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மாகவிஷ்ணுவின் பத்துத்திரு அவதாரங்களை வழிபட்ட பலனும், சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வழிபட்டபலனும் ஒருங்கே கிடைக்கக் கூடிய தாகவும், இருக்கிறதென்பதை வேதாகமங்கள் வலியுறத்துகின்றன. புராண இதிகாச திகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள், சைவர்களாக இருந்தாலும், வைணவர்களாக இருந்தாலும், எல்லோரும் ஒன்றுபோல சொல்லி வரும் 'மூலதோ பிரஹ்மரூ பாய, மத்தியதோ விஷ்ணுரூபிணி, அக்ரஹ்த சிவரூபாய, விருக்ஷராஜாயதே நம,' என்ற மந்திரமும் சிவலிங்க தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகிறதல்லவா? அல்லாமலும் உலகிலுள்ள எல்லா மரங்களும் அவற்றின் விதைகளும், கனிகளும், எல்லா வகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங்களும், பூமியும், சந்திரனும் சூரியனும், நட்சத்திரங் களும், அண்டங்கள்பலவும், ஆகாயமும், சிவலிங்க வடிவின் மேல்பாகம் போல அமைந்திருப்பது சிந்திக்கத்தக்கது.

2. சிவலிங்க வழிபாட்டினாலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதாகும்.

மேலும் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடியது பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். மனிதரைக் கொன்ற