உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

91

கொலைப்பாவம். அதை நீக்க வேண்டுமானால் தனியாக எந்த மூர்த்தியையும் வழிபட்டு, நீக்கிக்கொள்ள முடியாது என்பது வேதாகம விதி. அதை நீக்க வேண்டுமானால் சிவலிங்க பூஜையே செய்தாக வேண்டும் அதனாலேயே திருவிளையாடல் புராணத்தில் பஞ்சமாபாதகம் செய்தவனுக்கும் மதுரை மீனாஷிசிசுந்தரேசுவரர், அவன் பாவங்களை மன்னித்து, நற்கதி கொடுத்ததாகக் காண் கிறோம். காஞ்சிபுரத்தில் அம்மையார் சதாவும் இலிங்க பூஜை செய்துகொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. மகா பாரதத்தில் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜா துரந்தரர்களாக இருக்க, அர்ஜுனன் சிவபெருமானிடமிருந்து பாசுபதம் பெறுவதற்கு விசேஷத் தவம் புரிந்தது யாவரும் அறிந்ததே. இராமாயணத்தில் இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு, ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் இராமநாதரை சிவலிங்கத்தில் பிரதிஷ்டை செய்து வழி பாடாற்றியதும் ஹனுமார் தனியாகக் காசியிலிருந்து இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் காணலாம்., கந்த புராணத்தில் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஸ்ரீசுப்ரமணியப் பெருமான் திரிச்செந்தூரில் சிவபூஜை செய்து கொண்டிருப் பதைக் காணலாம். கஜமுகா சூரனைச் சம்ஹாரம் செய்த பிறகு ஸ்ரீ விநாயகப் பெருமான் திருச்செங்காட்டங் குடியில் சிவலிங்க பூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலுலகத்தில் அதிகாரம் பெற்ற சகலருமே சிவபூஜை செய்தே அவ்வப் பதவிகளைப் பெற்றிருப்பதாக, நமது நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் அருளிச் செய்திருக்கிறார்கள்.