உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

சிவமயம்

மதுரை ஸ்ரீதிருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்திற்குச் சொந்தமான

இருப்பிடம்;

திருப்புறம்பயத் தலவரலாறு

திருப்புறம்பயம் என்பது தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் தாலுகாவிலுள்ள ஒரு சிவத்தலம் ஆகும். இது கும்ப கோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையில் ருக்கின்றது. கும்பகோணம் புகைவண்டி நிலையத்தில் இறங்கி காவேரியாற்றின் வடகரை வழியாக மேற்கே சுவாமிமலைக்குச் செல்லும் கற்சாலையில் இரண்டு மைல் சென்று புளியஞ்சேரி என்ற ஊரைஅடைந்து, அங்கிருந்து வடக்கே கொள்ளிடத்திற்குச் செல்லும் சாலையில் ஒருமைல் சென்று இன்னம் புருக்குப் போய்ப் பிறகு இரண்டு மைல் சென்றால் இத்தலத்தையடையலாம். இத்தலத்திற்குத் தெற்கே இரண்டு மைலில் திரு இன்னம் பரும் தென்கிழக்கே இரண்டு மைலில் ஏரகரம் என்ற வைப்புத்தலமும், மேற்கே மூன்று மைலில் திருவைகாவூரும், வடமேற்கே மூன்று மைலில் கொள்ளிடத்தின் வடகரையில் கோகரந்தபுத்தூர் என்று வழங்கும் திருவிசய மங்கையும், கிழக்கே நான்கு மைலில் பெரிமிழலைக் குறும்ப நாயனாது ஊராகிய மிழலையும் எட்டு மைலில் சண்டேசுர நாயனாராது திருச்சேய்ஞலூரும் திருப்பனந் தாளும் உள்ளன. சைவ சமயாசாரியர்களால் பாடப் பெற்றன வாய்ச் சோழ வளநாட்டில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள அறுபத்து மூன்று சிவத்தலங்களுள் இத்திருப்புறம்பயமும் ஒன்றாகும். இதற்கு கல்யாணமாநகர், புன்னாகவனம் என்ற பெயர்களும் உண்டு.