உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

கோயில்

93

ஊரின் நடுவில், திருக்கோயில் கிழக்கு நோக்கிய திருவாயிலுடையதாக இருக்கின்றது இதற்கு ஆதித்தேச்சுரம் என்ற பெயர் முற்காலத்தில் வழங்கிவந்தது என்பது கல்வெட்டு களால் புலப்படுகின்றது இப்பெயர் பிற்காலத்தில் வழங்க வில்லை திருக்கோயில் கிழமேல் 391 அடி நீளமும், தென்வடக்கு 232 அடி அகலமும் உடையது. எனவே கோயிலின் பரப்பு சுமார் 90712 சதுர அடியாகும் கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. முதற்பிரகாரம் திருச்சுற்று மாளிகையுடன் அமைந் துள்ளது. முதற் பிரகாரத்தின் திருவாயிலை திருமாளிகைத் திருவாயில் என்று வழங்குவது முற்கால வழக்கம். ஓர் அழகிய சிறு கோபுரம் இங்கு இருக்கின்றது. இரண்டாம்பிரகாரத் திருவாயிலாகிய திருத்தோரண வாயிலில் ஐந்து நிலைக் கோபுர மொன்று எழிழுடன் விளங்குகின்றது. இது சுமார் 81 அடி உயரம் உடையது.

.

மூர்த்திகள்

99

திருக்கோயிலில் மூலத்தானத்தில், எழுந்தருளியுள்ள இறைவனுக்குச் சாட்சிநாதர், சாட்சீசுவரர் என்ற பெயரும், அம்பிகைக்குக் கரும்படு சொல்லி என்ற பெயரும் வழங்கி வருகின்றன. கல்வெட்டுகளில் திருப்புறம்பயமுடைய நாயனார், திருப்புறம்பயமுடைய மகாதேவர், திருப்புறம்பயமுடை பட்டாலகர், திருப்புறம்பயமுடைய தம்பிரானார் என்ற பெயர்களே காணப்படுகின்றன. திருஞான சம்பந்த சுவாமிகள் தாம் அருளிய தேவாரத் திருப்பதிகத்தில் "புறம்பயமமர்ந்த இறையோன் எனவும் “புறம்பயமமர்ந்தஉரவோன்" எனவும் குறிப்பிட்டுள்ளனர். அன்றியும், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப்புறம்பயப்பதிகம் ஐந்தாம் பாட்டில் “கரும்பொடுபடுஞ் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்” என்ற பகுதியில் அம்பிகையின் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. அம்பிகைக்குக் குறைவிலா அழகி என்ற பெயரும் உண்டு என்பது திருப்புறம்பயப் புராணத்தால் அறியப்படுகின்றது. ஒரு வணிக மங்கையின் திருமண நிகழ்ச்சி பற்றி மதுரைமா நகரில் சான்று கூறி அவள் துன்பம் நீக்கிய காரணத்தால், சாட்சிநாதர் என்ற பெயர் புறம்பயத் தெம் பெருமானுக்கு

66