உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

வழங்கி வரலாயிற்று. இவ் வரலாற்றைத் தலபுராணத்தில் விரிவாகக் காணலாம்.

கோயிலின் மகாமண்டபத்திற்கு வெளியே தென்கிழக்கில் பிரளயங்காத்த பிள்ளையார் கோயில் ஒன்று உளது இப்பிள்ளை யார் திருவுருவம், சந்தனநிறம் பொருந்திய ஒருவகைக்கல்லால் அமைந்திருக்கிறது இது சுயம்புமூர்த்தி என்று சொல்லப்படு கிறது. இதன் திருமேனியில் சங்கும், இப்பியும் காணப்படு கின்றன. இம்மூர்த்தியை இப்பொருள்களைக் கொண்டு, வருணன் வழிபட்டதாகத் தலபுராணம் உரைக்கின்றது. இராகு அந்தர கற்பத்தில் உண்டான ஒரு பிரளயத்தில் இவ்வூர் அழியாத வாறு காத்தருளினமை பற்றி இப்பிள்ளையார் பிரளயங்காத்தவர் என்ற பெயர் அடைந்தனர். இதனைத் தல புராணத்தில் விளக்க

மாகக் காணலாம்.

முதற்பிரகாரத்தில் சைவ சமயாசாரிய சுவாமிகள் நால்வர் திருவுருவங்களும், மேலைத் திருச்சுற்றுமாளிகையில், அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர், இமயாசலவேந்தன், விந்தாசலவேந்தன் ஆகிய பெரியோர்கள் சிவலிங்கங்களை. எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தனர் என்று தலபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள சிவலிங்கங்களும் இருக்கின்றன. (இச் சிவலிங்கங்களுள் இரண்டைப்பற்றிய உண்மை வரலால்றைப் பின்வரும் கல்வெட்டுச்செய்திகள் என்ற பகுதியிற் காணலாம்.) இரண்டாம் பிரகாரத்தில் வடகிழக்குப் பகுதியில் அம்பிகைக்குத் தனிக் கோயில் இருக்கின்றது.

இரண்டாம் பிரகாரத்திற்கு வெளியே ஐந்துநிலைக் கோபுர வாயிலுக்குக் கீழ்ப்புறத்தில் திருக்குளத்தின் தென்கரையில் தக்ஷிணா மூர்த்தி (அறமுரைத்த நாயனார்) கோயிலும் கீழ வீதியில் மேற்கு நோக்கிய மிகப்பெரிய விநாயகர் கோயில் ஒன்றும் இருக்கின்றன. “நால்வர்க்கறம் பயனுரைத்தனை புறம் பயமமர்ந்தோய்" என்ற திருஞானசம்பந்தசுவாமிகள் திருவாக்கும் 'புறபயமதனில் அறம் பல அருளியும்' என்ற மணிவாசகப் பெருமான் திருவாக்கும் அன்பர் ஒருவர் உள்ளத்தைக் கவர்ந்து, அறமுரைத்த நாயனார்க்குத் தனிக்கோயில் எடுப்பித்து வழிபாடு செய்யும் படி செய்துவிட்டன