உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

95

என்று தெரிகிறது. இதனைக் கல்வெட்டுச் செய்திகள் என்ற பகுதியால் உணரலாம்.

தல விருட்சமும், தீர்த்தங்களும்

இத்தலத்திற்குரிய விருட்சம் புன்னையாகும் அதுகோயிலின் முதற்பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது. அது மிகப் பழமைவாய்ந்தது என்பது பார்ப்போர்க்கு நன்கு புலப்படும். இரண்டாம் பிரகாரத்தில் தென்கிழக்குப் பகுதியில் மடைப் பள்ளிக்கு மேற்புறத்தில் ஒரு வன்னிமரம் இருக்கிறது. அது தல விருட்சமன்று. ஆயினும், வணிகமாதின் திருமண நிகழ்ச்சிக்குச் சான்றுகளாக இருந்தவற்றுள் வன்னிமரமும் ஒன்றாதலால் அதற்கறிகுறியாக அம்மரம் நிற்கின்றது. திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணத்திலும், தல புராணத்திலும். இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதி காரத்தில் "வன்னிமரமும் மடைப்பள்ளியுஞ் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள்" என்று இச்செய்தி சொல்லப் பெற்றிருக்கிறது.

66

கோயிற் கருகில் வடகிழக்கில் பிரம தீர்த்தம் என்ற திருக்குளம் உளது தல புராணத்தில் இதன் பெருமை கூறப்பட்டிருக் கிறது. இத்திருக்குளத்தின் கீழ்கரையில் சத்தசாகர தீர்த்தம் என்ற எழுகடற் பெருங்கிணறு ஒன்றும் இருக்கிறது. உலகைப் பிரளய காலத்தில் அழித்தற்குப் பொங்கி எழுந்த ஏழுகடல்களும் இறைவன் ஆணையால் அடங்கி அதனுள் தங்கியிருக்கிறது என்று தல புராணம் கூறும். கோயிலின் மேற்புறத்தில் ஒரு பொய்கையும், ஊரின் வடகிழக்கில் பொன்னியம்மன் குளமும் இருக்கின்றன. வை முறையே சந்திர புட்கரணி என்றும், சூரியபுட்கரணி என்றும், தலபுராணத்தில் கூறப்படுகின்றன. ஊருக்குக் கிழக்கே மண்ணியாறு தெற்கு வடக்காக ஓடும் பகுதியில் பூசத்துறை என்ற தீர்த்தச் சிறப்பு வாய்ந்த துறை ஒன்றும் உளது. கோயிலுக்கு வடக்கே ஒரு மைலில் கொள்ளிடப் பேராறும் ஓடுகின்றது. பிரமோற்சவத்தின் இறுதிநாளிலும், கார்த்திகைமாதத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், இறைவன் இடபாரூடராய் பரிவார தேவர் களுடன் எழுந்தருளி, பிரம