உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 தீர்த்தத்தில் தீர்த்தம் அருளுவது வழக்கம். அமாவாசை தோறும் சத்த சாகர கூபத்திற்கு இறைவன் எழுந்தருளித் தீர்த்தம் வழங்குவது பழைய வழக்கம். இது பல ஆண்டுகளாக நின்றுவிட்டது. பிற தீர்த்தங்களில் ஆண்டிற்கு ஒருமுறை சில விசேடநாட்களில் தீர்த்தம் வழங்கியருளுவதும் உண்டு.

தலப்பெருமை

இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்திகள், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமய குரவர் நால்வராலும் பாடப்பெற்ற பெருமையும் பழமையும் வாய்ந்தது. பெரிய புராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணத்தின் ஆசிரியராகிய சேக்கிழார் திங்கள் சூடிய செல்வர் மேவு திருப்புறம் பயம், எனவும், திசையுடையாடையர் திருப்புறம்பயம் எனவும் இத்தலத்தைப் பாராட்டியுள்ளனர்.

ஆளுடைய நம்பிகளாகிய சுந்தரமூர்த்திகள் தம் தேவாரப் பதிகத்தில் 'செங்கண் சேவுடைச் சிவலோகனூர் எனவும்’ 'எங்கள் சங்கரன் வந்து தங்குமூர்' எனவும் இத்தலத்தைச் சிறப்பித்துள்ளனர். அன்றியும், அப்பெரியார், 'மடையெலாங் கழுநீர் மலர்ந்து மருங்கெலாங் கரும்பாடத் தேன் -புடை யெலாமண நாறுஞ் சோலைப் புறம்பயம்' எனவும், 'கங்கைநீர் புலமெலாமண்டிப் பொன் விளைக்கும் புறம்பயம்' எனவும் இவ்வூரின் நில வளத்தையும் நீர்வளத்தையும் தேவாரப் பதிகத்தில் கூறியிருப்பது அறியத்தக்கது. அடிகள் திருவாக்குப் பொய்யாத வாறு பல வளங்களும் நிறைந்து இவ்வூர் விளங்குவதை இப்போதும் பார்க்கலாம்.

கல்வி கேள்விகளில் சிறந்த பெருமக்கள் பலர் இவ்வூரில் வாழ்ந்துள்ளார்கள். வீர சைவராகிய பாலசரசுவதி சுப்பிரமணியக் கவிராயர், பரமேசுவர உபாத்தியாயர் ஆகியோர் சென்ற நூற்றாண்டில் இடைப்பகுதியிலும், பிற்பகுதியிலும் இவ்வூரில் வாழ்ந்து பலருக்குத் தமிழிலக்கியங்கள் கற்பித்தும், திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடத்தியும் சிறப்புற்றார்கள். இவர்களுள் முதல்வர் உடையார்பாளையம் குறுநில மன்னராக கி.பி1801 முதல் 1835 வரைவிளங்கிய கச்சிரங்கப்ப உடையாரால்