உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

தற்போது மதுரை ஆதீனத்தில் எழுந்தருளியுள்ள. 291-வது குருமகா சந்நிதானம் திருவருள் தவயோக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பிறருடைய பொருள் உதவி யாதுமின்றி ஆலய வருமானத்தைக் கொண்டு சகல திருப்பணிகளையும் செய்வித்து பரீதாபி-u ஆவணி-மீ" 29s (14-9-1972) வியாழனன்று அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைபெறச் செய்திருக்கின்றார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் விபூதி பூசாமலும், ஆலயங்களுக்குச் செல்லாமலும் இருந்த பௌத்த சமணர்களை வாதில் வென்று, சற்குரு திருஞானசம்பந்த சுவாமிகள் திருநீறுபூசவும், ஆலயங் களுக்குச் சென்று வழிபடவும், மனம் மாறவும், மதம் மாறவும், வெற்றியுடன் எவ்வாறு செய்து வந்தார்களோ, அதேபோல வேறு எந்த சந்நிதானமும் செய்யாத மதமாற்றங்களைச் செய்து, கிறிஸ்தவர்களையும், மகமதியர்களையும், வெள்ளைக்காரர் களையும், விபூதி பூசவும், ஆலயவழிபாட்டில் ஈடுபடவும், அதி அற்புதமாகவும், புரட்சிகரமாகவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்து வருகிறார்கள். இந்துக்களுக்கு சமய, விசேட, நிர்வாண தீட்சைகளும், தகுதியுடையவர்களுக்கு சிவபூஜையும் எடுத்துக் கொடுத்து அருளுகிறார்கள்.

இவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து 1921ம் வருஷம் கடல் கடந்து இலங்கை சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு, வெள்ளைக் காரர்களோடு தொடர்பு கொண்டு, 5 லட்சம் மூலதனத்தில் ‘சுந்தரம்ஸ் லிமிட்டெட்' என்னும் தொழிலை நிறுவி. அதற்கு மானேஜிங் டைரெக்டராக இருந்து, ரூபாய் 20 லட்சம் வரை நேர் வழியில் திருவருளால் சம்பாதித்து, பொருள் துறையில் ஈடுபடுவதை விட்டு, அருள் துறையில் முழுதும் ஈடுபட தன்னை அர்ப்பணம் செய்து, 1953ல் 290வது குருமகா சந்நிதானம் அவர்களது அழைப்பின் பேரில் இளவரசுப் பட்டம் பெற்று, 1957ம் வருஷம் ஜனவரி மாதம் 7ம் தேதி அவர்கள் பரிபூரணம் அடைந்த பின், மதுரை ஆதீனத்தின் பேரரசாகத் திகழ்ந்து, நற்பணிகள் பல புரிந்து, மேன்மை கொள் சைவ நீதி உலகெங்கணும் விளங்க அல்லும் பகலும் அயராது பிரார்த்தித்து வருகிறார்கள்.