உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

109

வேதாந்த சாஸ்திரங்களில் வல்லுநராகவும் சிவாநு பூ ச் செல்வராகவும் விளங்கிய அவ்வடிகள் சமாதி கொண்டெழுந் தருளிய இடம் ஆகும். அவர்கள், திருஷ்டாந்ததாஷ்டாந்த விளக்கம், நவநீத சாரம் முதலான வேதாந்த நூல்கள் அருளிய பெரியார் ஆவர்.

மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் 290ம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த தலைவர் அவர்கள் 1945ல் திருப்புறம்பயத்தில் தேவார பாட சாலை ஒன்று அமைத்து நடத்திவருவதோடு, நாள் தோறும் புறம்பயத்தெம் பெருமான் திரு முன்னர் தேவாரப்பதிகங்கள் இன்னிசையோடு ஓதி வருதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்தார்கள். சைவ சமய முதற் பரமாச்சாரிய ராகிய திருஞானசம்பந்த சுவாமிகள் திருமடாலயத்தில் அவ்வடி களின் ஞான மரபில் எழுந்தருளியுள்ள ஆதீனத் தலைவர் அவர்களின் சைவ சமயத்தொண்டு மிகமிகப் பாராட்டற் பாலதாகும். சென்ற நூற்றாண்டின் இறுதியில் 1891ம் ஆண்டில் திருப்பணிகள் நிகழ்ந்தபின் குடமுழுக்கு நடந்துள்ளது என்று ஆண்டில் முதியவர்கள் கூறியுள்ளனர். அதன்பின் சுமார் 22 ஆண்டுகட்கு முன் கோயில் நிர்வாகப் பொறுப்பையேற்ற மதுரை மடத்து தம்பிரான் ஆகிய திருப்பெருந்திரு மாணிக்க வாசக ஞான தேசிய சுவாமிகள் ஆதீனத்தின் ஊக்கத்தினால் அரும்பாடுபட்டு திருப்பணிகள் பல செய்து கோயில் சிறப்புறச் செய்தனர். அம்பிகை கோயில் உட்பட பல சந்நிதிகள் புது உருவம் பெற்றன. பள்ளியறையொன்று புதிதாக அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டது. இம் முயற்சியில் நகரத்தார் உதவி இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வூரினராகிய ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் புதிதாக நால்வர் சந்நிதி கட்டுவதற்குப் பொருளுதவி புரிந்தார்கள். திருப்பணிகள் நிறைவேறிய பின் 25-6-1953ல் கோயில் குட முழுக்கு விழா சிறப்புடன் நிகழ்ந்தது. சென்ற ஆண்டில் ஊரினர் சிலரின் பொருளுதவியுடன் தேவாரப் பதிகங்கள் சலவைக் கல்லில் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன. 1959ல் திருக்குளம் திருப்பணி மதில்சுவர் முதலியவைகளை பெருநிலக் கிழார் காலஞ் சென்ற K.S. முத்தையன் செட்டியார் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.