உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

ஓவியங்கள் சிலவற்றையும், புன்னை மரத்தை அடுத்துள்ள மேற்பகுதியில் காணலாம்.

பிற குறிப்புகள்

முன்னாளில் அம்பிகையின் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதியுடையதாக இருந்தது என்று தெரிகிறது. நாகூர் செட்டியார் ஒருவர், அம்பிகையைத் தம்குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வரும் நாட்களில் அக்கோயிலைத் தெற்கு நோக்கிய சந்நிதியுடையதாக மாற்றியமைத்து விட்டாராம். அவர் படிமம் ஒன்று அம்பிகையின் திருக்கோயிலுள் கூப்பிய கைகளுடன் நின்ற கோலத்தில் இருப்பதை இன்றுங் காணலாம். திருப்புறம்பயத்திலிருந்து கும்பகோணத்திற்குக் கோடை காலத்தில் போவதற்குரிய குறுக்கு வழியில் ஏரகரத்திற்குத் தென்புறத்தில் வயல்களுக்கு நடுவில் உள்ள பெருங்குளத்தை வெட்டுவித்தவரும் சிவநேசச் செல்வராகிய அச்செட்டியாரே யாவர். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், கோயில் மகா மண்டபம் முதலானவற்றை உயரத் தூக்கிக்கட்டியவர் மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் அடியார் குழாங்களுள் ஒருவராகிய ஸ்ரீ சிதம்பரநாதத் தம்பிரான் சுவாமிகள் ஆவர். அவர்கள் படிமத்தை அம்பிகையின் சந்நிதிக்கு வெளியேயுள்ள பெரிய மண்டபத்தின் கற்றூணில் இன்றும் பார்க்கலாம். திருக்கோயில் சந்நிதியில் கிழக்கே ஒருமடம் உளது.

இம்மடம் திருக்கோயிலின் பரம்பரை அறங்காப்பாள ராகவுள்ள மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்திற்கு உரியதாகும். இதற்கு மேற்கே ஒரு மடம் இருந்தது என்றும், அது மேற்குறித்த நாகூர்ச் செட்டியாரால் கட்டப்பெற்றது என்றும் வயதுமுதிர்ந்த பெயரிவர்கள் கூறுகின்றனர். அந்த மடம் இந்நாளில் காணப்படவில்லை. திருமாலுக்குப் புதியதாகக் கட்டப் பெற்ற கோயில் ஒன்று தெற்குத் தெருவில் உளது. அன்றியும், மாரியம்மன், ஐயனார், பொன்னியம்மன் (பிடாரி), திரௌபதியம்மன் ஆகிய கிராம தெய்வங்கட்கும் கோயில்கள் இருக்கின்றன. ஊருக்கு வடகிழக்கில் மண்ணியாற்றுக்கு அண்மையில் யாழ்ப்பாணத்து ஸ்ரீ ஆறுமுகதேசிக சுவாமிகள் மடம் இருக்கின்றது. அது சுமார் 80 ஆண்டுகட்கு முன்னர்