உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

107

வணிகர்களும் இருந்தனர் என்பதும், இவ்வூரிலுள்ள ஒரு தெருவிற்கு விரையாக்கலிப் பெருந்தெரு என்ற பேர் இருந்தது என்பதும், தாமோதர விண்ணகரம் என்ற பெருமாள் கோயில் ஒன்று இருந்தது என்பதும், கடியாபரணர் மடம் என்றதோர் மடம் இருந்தது என்பதும், திருக்கோயிற்கு மூன்று பிரகாரங்கள் ருந்தன என்பதும், சோழ மன்னர்களது சேனாதிபதி, அமைச்சர், முதலானோரில் சிலர் இவ்வூரில் அக்காலத்தில் இருந்தனர் என்பதும் அந்நாளில் பங்குனி மாதத்தில் கோயிலில் திருவிழா நடைபெற்றது என்பதும், மண்ணியாற்றிற்குக் குஞ்சரமல்லன் என்றபெயர் வழங்கிற்று என்பதும் மற்றுஞ் சில செய்திகளும்,

அக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளால் வெளியாகின்றன. *இத்திருக்கோயிலின் சிறப்பியல்புகள் முற்காலச் சோழர்காலம் என்னும் ஆங்கிலம் தமிழ் இவற்றில் எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டுள்ளன.

திருப்புறம்பயம் என்னும் கிராமம் சோழ மண்டலத்தில் இராஜேந்திர சிங்கவள நாட்டில் அண்டாடுக் கூற்றத்தில் நின்று நீங்கிய தேவதானம் என்று கல்வெட்டுகள் எல்லாம் உணர்த்துவ தால், கிராமம் முழுவதும் புறம்பயமுடைய பெருமானுக்கு உரியதாக இருந்தது என்று தெரிகிறது. திருப்புறம்பயத்தில் உட்சுற்று மனைகளில் குடியிருப்போர் தென்னை மரம் ஒன்றிற்கு இருபது தேங்காய்கள் திருக்கோயிலுக்கு தருதல் வேண்டும் என்று மூன்றாம் இராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட உத்தரவு ஒன்று கல்வெட்டுகளில் காணப்படுவதும் இச்செய்தியை வலியுறுத்துகின்றது. அன்றியும் கண்ணங்குடி கீழக்கண்ணங் குடியில் வீடு நிலம், சேர்வையாம் நிலம், கோயிற்பற்று, ஆலத்தும் மேடு, மேல்காவேரிப் பற்று, கருப்பூர், சீலசிந்தாமணி, வேம்பற்று பத்தாங்கட்டளை, ஏறுபாடியான பேட்டை, சிற்றாமூர் சிதடக்குடி ஆகிய ஊர்கள் புறம்பயத் திறைவனுக்குரியனவாயிருந்தன என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. கருப்ப இல்லைச் சுற்றியுள்ள மாடிகளில் இறைவனுடைய பல திருவுருவங் களையும் அகத்தியர் படிமத்தையும் காணலாம். பழமையான

Early Chola Art - part I. S.R, Balasubramanian 1966. PP. 185-186, முற்காலச் சோழர் சிற்பமும் கலையும்.