உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

விறன்மிண்டன், அணுக்க நம்பி என்ற பெயருடையவர்கள் ஐப்பசித் திருவிழ பங்குனித்திருவிழா, திருவேட்டை தீர்த்தங்கட்கு நிபந்தமாக நிலம் விட்டிருக்கின்றனர். விக்கிரம சோழன் ஆட்சி காலத்தில், முடிகொண்ட சோழப் பல்லவரையன் என்பவன், சைவ சமயாச்சார்யார் மூவர்க்கும் நாள்வழிபாட்டிற்கு நிலம் கொடுதுள்ளான். இரண்டாம் இராஜஇராஜன் ஆட்சியில் (கி.பி. 1173ல்) ஆண்டவர் கடியாபரணர் யாத்திரிகர் கட்கு உணவளிப் பதற்கு 40 பொன் கொடுத்துள்ளார். மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் ஆலங்குடையான் அடிகள் புறம்பயனும், திருச்சிற்றம்பல முடையானும், சோமாஸ்கந்தர், அம்பிகை கூத்தாடுந்தேவர், பிராட்டியார், பிள்ளையார், முத்துமுளைக் கன்று, அறம்பயந்த பிள்ளையார் இவர்கட்கு அமாவாசை தோறும், திருமஞ் சனத்திற்கும், திருவமுதுக்கும் நிலம் விட்டிருக் கின்றனர். இவ்வேந்தன் ஆட்சியில் கி.பி. 1215-ல் வீதிவிடங்க விழுப்பரையனும், அவன் தம்பி அகிலநாயக விழுப்பரையனும் திருக்கோயில் முதற் பிராகாரத்தில் திருச்சுற்று மாளிகையில், திருவலஞ்சுழிப் பெருமானையும், புற்றிடம் புற்றிடம் கொண்ட பெருமானையும், மூன்றாம் பிராகாரத்தில் கோபுர வாயிலின் பக்கத்தில் அறமுரைத்த நாயனாரையும் (தக்ஷிணாமுர்த்தி) எழுந்தருளுவித்து கி.பி. 1235 பூசைக்கு நிலம் விட்டுள்ளனர். மூன்றாம் இராஜ ராஜா சோழன் ஆட்சியில் கி.பி. 1239ல் குந்தவை நல்லூர்ச் சபையார் புறம்பயத் திறைவனுக்கு நாள் வழிபாட்டிற்கு நிலம் கொடுத்திருக்கின்றனர். மூன்றாம் இராஜேந்திர சோழன் ஆட்சியில் நிலம் அளித்து செங்கழுநீர் மலர் இறைவனுக்குச் சாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது. விஜயநகர வேந்தன் விருபாட்சராயன் ஆட்சியில் கி.பி. 1485-ல் புறம்பயத் திறைவற்கு பலஊர்களிலு முள்ள நிலங்கட் கெல்லாம் அரசாங்க வரி தள்ளிக் கொடுக்கப் பட்டு அப்பொருள் கொண்டு மகவிழா நடத்துமாறு மகா மண்டலேசுவரன் கோனேரி தேவமகாராஜா வினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கல்வெட்டுகள் கோயிலில் நுந்தா விளக்குகளும், சந்திவிளக்கு களும் வைப்பதற்குக் கொடுக்கப்பட்ட நிபந்தங்களைத் தெரிவிக் கின்றன. அக்காலத்தில் திருப்புறம் பயத்தில் சங்கரப்பாடியார், என்ற ஒரு வகை வணிகர்களும் வளஞ்சியர் என்ற ஈழநாட்டு