உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார்கள். 1940ம் ஆண்டிலிருந்து இந்து மத அறநிலையப் பாதுகாப்புக் கழகத்தார் ஆதீனத் தலைவர் அவர்களுடன் கலந்துகொண்டு நிர்வாக அதிகாரியை நியமித்து வருகிறார்கள். இதற்குச் சுமார் 230-94 ஏக்கர்கள் நன்செய் புன்செய் தோப்புகள் இருக்கின்றன. தொன்மையான சிறப்புடைய இத்திருக்கோயில் சோழப்பேரரசு காலத்தில் மிக நல்லநிலையில் விளங்கியுள்ளது. இதில் உள்ள பல செப்புப் படிமங்கள், கல்படிமங்கள் சிற்பங்கள் ஆகியவை காணத் தக்கவையாகும்.

திருப்புறம்பயப் பாடல்கள்.

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவிராகம் பண் - இந்தளம். திருச்சிற்றம்பலம்.

மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க் கறம்பய னுரைத்தனை புறம்பய மமர்ந்தோய். விரித்தனை திருச்சடை அரித்தொழுகு வெள்ளம் தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன் எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம் பொருத்துதல் கருத்தனை புறம்பய மமர்ந்தோய்

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்

பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்

புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பய மமர்ந்தோய்.

வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்

துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க உளங்கொள் வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு

புளங்கொள விளங்கினை புறம்பய மமர்ந்தோய்.

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம் கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்