உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை விரும்பினை புறம்பய மமர்ந்த இறையோனே. அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும் நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப் புனற்படு கிடக்கையை புறம்பய மமர்ந்தோய்.

மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம் அறத்துறை பொறுத்துன தருட்கிழமை பெற்றோர் திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும் புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய்.

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க உழங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி வலங்கொள் வெழுந்த வனலங்கவின வஞ்சு புலங்கொள விலங்கினை புறம்பய மமர்ந்தோய்.

வடங்கெட நுடங்குண விடந்தவிடை வல்லிக் கிடந்தவ னிருந்தவ னளந்துணர லாகார் தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப் புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய்.

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென உடற்குறை களைந்தவ ருடம்பினை மறைக்கும் படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம் அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே.

கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம் தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன் சுரும்பவிழ் புறம்பய மமர்ந்ததமிழ் வல்லார் பெரும்பிணி மருங்கற வொருங்குவர் பிறப்பே.

திருநாவுக்கரசு நாயனார்

திருத்தாண்டகம். திருச்சிற்றம்பலம்.

கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்

கொடுங்கோளூர் தண்வளவி கண்டி வூரும்

113