உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

நடமாடு நன்மருகல் வைகி நாளும்

நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்

படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்

பழையாறும் பாற்குளமும் கைவிட் டிந்நாள்

பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்

புறம்பயநம் மூரென்று போயி னாரே

முற்றொருவர் போல முழுநீ றாடி

முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு

ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை

ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணுகின்றார்

மற்றொருவ ரில்லைத் துணை எனக்கு

மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்

புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்

புறம்பயநம் மூரென்று போயினாரே

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்

ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்

ஏகாச மாவிட்டோ டொன்றேந்தி வந்

திடுதிருவே பலியொன்றார்க் கில்லே புக்கேன்

பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்

பாவியேன் கண்ணுளே பற்றி நோக்கிப்

போகாத வேடத்தர் பூதஞ் சூழப்

புறம்பயநம் மூரென்று போயி னாரே

பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப்

பனிமுகில் போல் மேனிப் பவந்த நாதர்

நென்மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடுர் பாச்சில்

கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றம்

கடனாகைக் காரோணம் கைவிட் டிந்நாள்

பொன்மலிந்த கோதையரும் தாமும் எல்லாம்

புறம்பயநம் மூரென்று போயி னாரே

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்

சிரமாலை சூடிச் சிவந்த மேனி

மத்தகத்த யானை யுரிவை மூடி

மடவா ளவளோடு மானொன் றேந்தி