உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

அத்தவத்த தேவ ரறுப தின்மர்

ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப் புத்தகங்கைக் கொண்டு புலித்தோல் வீக்கிப் புறம்பயநம் மூரென்று போயி னாரே

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி

நல்லபுலி யதண்மே னாகங் கட்டிப்

பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்

பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்

துஞ்சிடையே வந்து துடியும் கொட்டத்

துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்

புன்சடையின் மேலோர் புனலும் சூடிப்

புறம்பயநம் மூரென்று போயி னாரே

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி

மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்

செறியிலங்கு திண்டோண்மேல் நீறு கொண்டு திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி

நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று

நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்

பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்

புறம்பயநம் மூரென்று போயினாரே

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி

நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு

கொல்லேறுங் கொக்கரையும் கொடுகொட் டியுங்

குடமூக்கி லங்கொழியக் குளிர்தன் பொய்கை

நல்லாளை நல்லூரே தவிரே னென்று

நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப்

பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்

புறம்பயநம் மூரென்று போயி னாரே.

விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு

வெண்டோடு பெய்திடங்கை வீணை யேந்தித்

திரையேறு சென்னிமேற் றிங்க டன்னைத்

திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்

அரையேறு மேகலையாள் பாக மாக

வாரிடத்தி லாட லமர்ந்த வையன்

115