உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

121

அணிந்துரை

தமிழ் வேந்தர் மூவருள்ளும் சோழ மன்னர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் பெருவளமும் பொதியிலும் இமயமும் போலத் தவ ஞானிகளுக்கு உறையுளாக விளங்கும் பூம்புகார் நகரமுமே அவர்கள் சிறப்பு மிகுவதற்குக் காரணமானவை என்று கூறல் மிகையாகாது. சோழகங்கம் ஏரி, வீரநாராயணன் ஏரி போன்ற ஏரிகளை அமைத்தும் காவிரி நதிக்குப் பல கிளை நதிகளை வெட்டுவித்தும் காவிரிக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அணை அமைத்தும் சோழ நாட்டைத் தென்னாட்டின் நெற் களஞ்சியமாகச் செய்தவர்கள் சோழ மன்னர்களே. தவிரவும் வீரச்செருக்காலும் கொடைத் திறத்தாலும் தமிழ் ஆர்வத்தாலும் சமய உணர்வினாலும் அவர்கள் நம் நாட்டிற்குச் செய்துள்ள தொண்டுகள் அளவிட முடியாதவை. அன்னையும் பிதாவும் எனச் சோழ வளநாட்டையும் சோழ மன்னர்களையும் நாம் ஒவ்வொருவரும் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

பூம்புகார் நகரத்தைத் துறைமுகப்பட்டினமாக அமைத்துக் கொண்ட சோழமரபினர், நாளடைவில் அதன் இயற்கை அழகில் ஈடுபட்டவர்களாகி அதனைத் தலைநகரமாகவே அமைத்தும் போற்றிவந்தார்கள். அசைந்து அசைந்து செல்லும் காவிரி நங்கையும், அந்நங்கையைப்பேரார்வத்தோடு தனது அலைக் கரங்களால் அணைத்துத் தழுவிக் கொள்ளும் குணகடலும் இன்றும் கண்கொள்ளாக் கவின்பெறு காட்சியாய் விளங்கு வதை நாம் அறிவோம்.

அப்படிப்பட்ட

பூம்புகார் நகரத்தின் பழைய அமைப்பினையும் சிறப்பினையும் எல்லோரும் அறிந்து மகிழ்தற் பொருட்டுக் “காவிரிப்பூம்பட்டினம்" என்ற இச்செந்தமிழ் நூலை எனது உழுவலன்பரும் வரலாற்று ஆராய்ச்சித் துறைப்