உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

பேரறிஞருமாகிய திருவாளர் டி.வீ. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் அழகிய தமிழ் நடையில் எழுதியுள்ளார். அவர் களுடைய ஆராய்ச்சித் திறன் மேனாட்டு அறிஞர்களாலும் பாராட்டப் பெற்றுள்ளது.

இந்நூல் வெளிவருவதற்குக் காரணமாக இருக்கும் செந்தமிழ்ச் செல்வர் திருவாளர் என். தியாகராசன் அவர்களது பேரார்வமும் உலையாத ஊக்கமும், பொருட் செலவையும் கருதாது கருமமே கண்ணாகச் செய்து வரும் தமிழ்த்தொண்டும் அறிஞர்கள் உணர்ந்து பாராட்டத்தக்கவையாகும்.

இந்நூலை எழுதி உதவிய பேரறிஞர் திருவாளர் டி.வீ. சதாசிவ பண்டாரத்தார் அவர்களும் இந்நூலை வெளியிட்ட இளைஞர் திரு. என். தியாகராசன் அவர்களும் நீடு வாழ்ந்து செந்தமிழ்க்கும் பூம்புகார் நகரத்திற்கும் மேலும் மேலும் பெருந்தொண்டு செய்து சிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் திருவருளைச் சிந்தித்து வாழ்த்து கிறேன்.

குருபூசை மடம், பூம்புகார், 12-5-1959

மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள்.