உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

உண்மையான அன்பர்களின் நேர்மையான விருப்பத்தை மறுக்காமல் நிறைவேற்றும் இயல்புடைய யான், தக்க சான்று களுடன் இந்நூலை ஒருவாறு எழுதி முடித்தேன். இதுகாறும் யான் எழுதியுள்ள ஆராய்ச்சி நூல்கள் எல்லா வற்றையும் தமிழகம் பெரிதும் மதித்து ஏற்றுக் கொண்டமை போல இந்நூலையும் ஏற்றுக்கொள்ளுமென்று நம்புகிறேன்.

இம்முயற்சியில் என்னை ஈடுபடுமாறு செய்து அணிந்துரை வரைந்தருளிய மேலையூர் அறுபத்துமூவர் திருமடத்து அருட்பெருந் திரு. மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கும், அன்பர் திரு. என். தியாகராசன் அவர்களுக்கும் முறையே என் வணக்கமும் நன்றியும் உரியவாகும்.

இதனை எழுதி வெளியிடுங்கால் உறுதுணையாயிருந்து உதவி புரிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறை விரிவுரையாளர் அன்பர் திரு. க. வெள்ளைவாரணர் அவர்களை என்றும் மறவேன்.

இங்ஙனம்.

T.V. சதாசிவ பண்டாரத்தார்.