உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

129

காவிரிப்பூம்பட்டினம்

சோழமன்னர்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர். அம்மூவருள் சோழ மன்னர்கள் ஆண்ட பகுதி சோழ நாடு எனப்படும். அந்நாட்டில் வளங்கொழித்தோடுவது காவிரியாறு, காவிரி வளத்தால் சோழ நாடு பொருட்செல்வத்தில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் கலைச் செல்வத்தாலும், அருட் செல்வத்தாலும் கூடப் பொலிவு பெற்று விளங்கியது. உலகம் முழுவதும் நாகரிகமே இல்லாமல் மக்களும் விலங்குகளும் ஒரு தன்மையாக வாழ்ந்த காலத்திலேயே சோழ மன்னர்கள் காவிரி யாற்றுக்குக் கரையெடுத்தும் அணையிட்டும் கால்வாய்கள் செப்பனிட்டும் உணவுப் பெருக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது அறிஞர்கள் அறிந்ததே. அதுமட்டுமன்றி வீரச்செருக்கால் அயல்நாடுகளை வென்றும், வாணிபத் துறையில் உலக நாடு களோடு தொடர்பு கொண்டும் கலைச் செல்வத்தால் நாட்டு மக்களுக்கு இன்ப வாழ்க்கையை வழங்கியும், சோழ மன்னர்கள் சிறப்புற்றார்கள்.

பூம்புகார்

சோழ மன்னர்க்குரிய தலைமை நகரங்களுள் ஒன்றாகவும் இந்நாட்டு வாணிக வளர்ச்சிக்குரிய கடற்றுறைப் பட்டின மாகவும் விளங்கியது காவிரிப் பூம்பட்டினம் என்ற பேரூர் ஆகும். இவ்வூர் சோழ நாட்டினைத் தாய்போற் பேணிக் காக்கும் நன்னீர்மை வாய்ந்த காவிரியாறு கடலொடு கலக்கும் நிலப்பகுதியில் அமைந்தமையால் புகார் எனவும், காவிரிப்பூம்பட்டினம் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி புரிந்த கரிகால்வளவன் காலத்தில் இந்நகரம் முழுப் பெருமையோடு வீறு பெற்று விளங்கியது. சுருக்கச்