உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

கடற்பரப்பில் நான்கு ஐந்து கல் தொலைவுவரை கட்டிடங்களும் நீண்ட சுவர்களும் தட்டுப்படு வதாலும் இப்பொழுதுள்ள ஊர்ப் பகுதியில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயுள்ள நிலப் பகுதிகள் பல காணப்படு வதாலும் அவ்விடங்களை ஆராய்ந்தால் இம்மண்டபம் கடலுக்குள்ளேயோ அன்றி ஊர்ப்பகுதியிலேயோ கண்டுபிடிக்கப் பட்டு விடலாம் என்று உறுதியாகக் கூறலாம். தமிழ் ஆட்சி நிலவிவரும் இந்நாளில் நமது அரசாங்கம் முயன்றால்தான் இவ்வுண்மையைச் சோதித்து அறியமுடியும்.

நாளங்காடி

சோழ மன்னர்க்குரிய தலைமை நகரமாகவும் வாணிக வளர்ச்சிக்குரிய துறைமுகப் பட்டினமாகவும் அமைந்த இப்புகார் நகரம், அரசர் பேரூர் ஆதற்கு வேண்டிய அரண் முதலிய அங்கங் களைக் குறைவறப் பெற்று, மேற்பகுதி பட்டினப்பாக்கம் எனவும், கடல் வாழ்நர் ஆகிய பரதவர்களும், வெளிநாட்டு வணிகர்களும் பிறரும் கலந்து வாழ்தற்குரிய வகையில் கடற்கரையை யொட்டி அமைந்த கிழக்குப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனவும் முற்காலத்தில் இருபெரும் பிரிவுடையதாய் விளங்கியது. பட்டினப்பாக்கத்திற்கும் மருவூர்ப் பாக்கத்திற்கும்

டையே இருபெரு வேந்தர் முனையிடம் போன்று அமைந்த நிலப்பரப்பு மரங்கள் செறிந்த சோலையாக விளங்கியது. ச்சோலை பட்டினப் பாக்கத்திலுள்ளவர்களும் மருவூர்ப் பாக்கத்திலுள்ளவர் களும் தமக்கு வேண்டிய உணவு முதலிய நுகர் பொருள்களைப் பகற்காலத்தே பெற்றுச் செல்வதற்குரிய கடைவீதியாக அமைந் தமையால் நாளங்காடி என்ற பெயரால் குறிக்கப் பெற்றது.

" இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியின் இடைநிலம் ஆகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி-"

என்பது சிலப்பதிகாரம்.

(சிலப் 5-59-63)