உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

133

சின்னமாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் நிலை பெற்றிருந்தது. கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி. 1216-1238) வாழ்ந்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பான். சோழநாட்டிற் படையெடுத்து வந்து சோழர்க்கு உரிய அரண்மனை முதலியவற்றைத் தகர்த்து அழித்து வருபவன், இப்புகார் நகரத்தில் முன் கரிகால்வளவன் உருத்திரங் கண்ணனார்க்கு உரிய பரிசிலாக விட்ட பதினாறுகால் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டுச் சென்றான் என்பது வரலாறு. இச்செய்தி,

66

வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப்

பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே"

என அம்மன்னன் காலத்தில் திருவெள்ளைறையிற் பொறிக் கப்பெற்ற கல்வெட்டுப் பாடலால் இனிது விளங்கும்.*

சித்திர மண்டபம் எங்கே?

மேற்குறித்த பதினாறுகால் மண்டபத்தைச் சித்திர

மண்டபம் என்றும் குறிக்கின்றார் இளங்கோ அடிகள்.

66

செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க வேந்தன்.”

(சிலப்-நடுகற், 85-87)

என்பது சிலப்பதிகாரம். பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கொடுமையான படையெடுப்பு ஏதும் தமிழ்நாட்டில் நடந்ததாகச் சரித்திரம் கூறவில்லை. ஆதலால் அம்மண்டபம் பிறரால் அழிக்கப்பட்டிருக்க முடியாதென்பது உறுதி. அவ்வாறாயின் மண்டபம் என்ன ஆயிற்று? என்ற கேள்வி எழுவது இயல்பே. நாளடைவில் ஏற்பட்ட கடற் கொந்தளிப்பால் விழுங்கப் பட்டோ அல்லது மக்களது கவனக் குறைவால் பாதுகாப்பாரின்றிச் சிதைவுற்றோ அம்மண்டபம் அழிந்திருத்தல் வேண்டும், எனக் கருதவேண்டி யுள்ளது. இன்றும் புகார் நகரத்தையொட்டிய 1. பாண்டியன் வரலாறு. பக்கம் 116