உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

பேரவையில் அரங்கேற்றினார். தேனினும் இனிய செந்தமிழ்ப் பாட்டாகிய அதன் சுவை நலத்தில் திளைத்த சோழ மன்னன் தான் இமயத்திற் புலியிலச்சினை பொறித்து மீண்ட காலத்து மகதநாட்டு மன்னன்பால் திறையாகப் பெற்று வந்த பட்டி மண்டபத்துடன் பதினாறு நூறாயிரம் பொன்னையும் கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குப் பரிசிலாகத் தந்து பாராட்டினான் என்பது வரலாறு. இச் செய்தியினைக் கவிச் சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டார்.

எனக்

"தத்துநீர் வரால் குருமி வென்றதும்

தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன் பத்தோ டாறு நூறாயிரம் பெறப்

பண்டு பட்டினப் பாலை கொண்டதும்"

(இராச. 21.)

கலிங்கத்துப் பரணியிற் குறித்துள்ளார், புலவர்

பெருமானாகிய ஒட்டக்கூத்தர்.

66

66

‘அன்று கவிக்கு வியந்து நயந்து தரும்பரிசிற் கொருபோர் ஆழியில் வந்து தராதலம் நின்று புகாரி லனைத்துலகும் சென்று கவிக்கு மகத்தது தூண் வயிரத்தினு முத்தினுமெய் செய்ததொர்பொற்றிரு மண்டபம் நல்கிய செயகுல நாயகமே"

“ நாவலனே கிடையா நவமணி மண்டபம் நின்

பாவலனே கவரப் பண்டு பணித்தவனே"

எனக் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் உளமுவந்து பாராட்டி யுள்ளார்.

சிதையாத பதினாறுகால் மண்டபம்

காவிரிப்பூம் பட்டினத்தைச் சிறப்பித்து உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை என்ற நூல் அரங்கேறிய சிறப்புடையதும் அப்பாடலின் பரிசிலாக உருத்திரங் கண்ண னார்க்கே உரிமைசெய்யப் பெற்றதும் ஆகிய பதினாறுகால் மண்டபம். உருத்திரங்கண்ணனாரது புலமைத் திறத்தையும் அப்புலவர் பெருமானை ஆதரித்துப் போற்றிய கரிகால் வளவனது கொடைத் திறத்தையும் அறிவுறுத்தும் அறிவுச்