உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

131

மணிகளாலும் நுண்ணிதின் அமைக்கப்பட்ட முத்துப்பந்தர், பட்டிமண்டபம், தோரணவாயில் ஆகிய இம் மூன்றையும் பெற்று வந்த கரிகால்வளவன் இவற்றைக் காவிரிப் பூம்பட்டினத்தில் நிலைபெற வைத்தான் எனச் சிலப்பதிகாரம் கூறும். அந்நூலில்.

66

" இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலின் திருமா வளவன்

இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்

கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்

பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும், பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின

துயர் நீங்கு சிறப்பினவர் தொல்லோர் உதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம்-'

(சிலப்.5.89-110)

என இளங்கோவடிகள் கூறுதல் இங்கு அறியத்தக்கதாகும்.

கொடைத் திறன்

வேந்தர் பெருமானாகிய கரிகால் வளவனது உலையா வூக்கம், வீரருள் வீரனாகிய அம்மன்னன் குமரி முதல் இமயம் வரை படையெடுத்துச் சென்று பெற்ற வெற்றித்திறம், அவ்வரசனால் அணிபெற அமைக்கப்பெற்ற காவிரிப்பூம்பட்டின மாகிய இந்நகரத்தின் செல்வப் பெருக்கம், தொழிற் சிறப்பு, மக்களது வாழ்க்கை முறை ஆகிய நலங்களைப் பாராட்டும் முறையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பெருமான் பட்டினப்பாலை என்னும் அழகிய பாடலைப் பாடி அம்மன்னனது