உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

பட்டினப்பாக்கம்

137

நாளங்காடிக்கு மேற்கே சோழ மன்னர் அரசு வீற்றிருக்கும் திருநகரமாக அமைந்த பகுதி பட்டினப்பாக்கம் என்பதாகும். இதன்கண் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக் குரிய திருக்கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், நீலமேனி நெடியோனாகிய திருமால் கோயிலும், வால்வளைமேனி வாலியோனாகிய பல தேவன் கோயிலும், மாலைவெண்குடை மன்னவன் வாழும் அரண்மனையும் அதனைச் சூழ அமைந்த இராசப் பெருந்தெருவும் அமைச்சர் படைத்தலைவர் முதலிய அரசியலதிகாரிகளின் இருப்பிடங்களும் பெருங்குடி வணிகர் வாழும் மாடவீதிகளும் உழுவித்துண் போராகிய வேளாண் மாந்தர் வாழும் பெருந்தெருக்களும் தாம் தாம் வல்ல நுண் கலைத் திறங்களால் மன்னரையும் நாட்டு மக்களையும் மகிழ் விக்கவல்ல கலைச்செல்வர் உறைவிடங்களும் அமைந்திருந்தன. கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாடமறுகும் மறையோ ரிருக்கையும், வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும், திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும், சூதர் மாகதர் வேதா ளிகரொடு

நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்

பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்

பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்

நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும்

கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்

நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்

இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும்