உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கம்.

(சிலப்.5-40-58)

என்பது சிலப்பதிகாரம்.

மருவூர்ப்பாக்கம்

நாளங்காடியாகிய சோலைக்குக்கிழக்கே கடற்கரையை யொட்டி யமைந்த நகர்ப்பகுதியாகிய மருவூர்ப்பாக்கத்தில் கப்பல் மூலமாக வாணிகம் புரியும் வெளிநாட்டு வணிகர்கள் தம்முள் வேறுபாடின்றித் தங்கி வாழ்தற்குரிய இருப்பிடங் களும், வண்ணம், சுண்ணம், சாந்தம், நறும்புகைக்குரிய மணப் பொருள்கள், நறுமலர் முதலியவற்றை விற்போர் விலைகூறித் திரியும் பெருந் தெருக்களும், பட்டுநூலாலும், நுண்ணிய மயிராலும், பருத்தி நூலாலும் அழகிய ஆடைகளை நெய்ய வல்ல பட்டுச் சாலியர் முதலியோர் இருக்குமிடங்களும், பவளமும் ஏனைய மணிகளும் பொன்னும் ஆகிய இவற்றைப் பொன் அணிகலங்களுடன் வைத்து ஒப்பு நோக்கி மதிப்பிட வல்லார் வாழும் வளம் மலிந்த வீதிகளும், நெல்வரகு முதலிய தானியங்களை நிறையக் குவித்து வைத்துள்ள கூலக்கடைத் தெருவும், பிட்டு அப்பம் முதலிய சிற்றுண்டிகளைச் செய்து விற்போர், கள், மீன், உப்பு, நிணம் முதலியவற்றை விற்போர், இலையமுதிடுவோர், பஞ்சவாசம் விற்போர் முதலியவர்களும், வெண்கலத் தொழில் செய்யும் கன்னார், மரங்கொல் தச்சர், செம்பினாற் கலங்கள் செய்வோர், இரும்பினால் தொழில் புரியும் கொல்லர், ஓவியர், சிற்பாசிரியர், பொற்கொல்லர், மணிகளிழைப்போர், தையல் வினைஞர், நெட்டி துணி முதலிய வற்றால் பறவை பூங்கொத்து முதலிய உருவங்களை அமைப்போர், குழல் முதலிய துளைக்கருவியாலும் யாழ் முதலிய நரம்புக் கருவியாலும் பண்ணும் திறமும் ஆகிய இசையினை வளர்க்கும் குழலர் பாணர் முதலியோர் ஆகிய பல்வகைத் தொழிலாளர்கள் வாழ்தற்குரிய இடங்களும் அமைந்திருந்தன.

வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்