உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும், கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்,

வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்.

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும் தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும், பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்,

காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும், கஞ்சகாரரும் செம்புசெய் குநரும்

மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்

குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பா ணிருக்கையும்

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்

என்பது சிலப்பதிகாரம்.

139

(சிலப் 5-7-39)