உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

இந்திரவிழாவெடுத்தல்

மேற்குறித்த பட்டினப்பாக்கத்திற்கும் மருவூர்ப் பாக்கத் திற்கும் இடைநிலமாயமைந்த நாளங்காடியிலே பலி பீடம் ஒன்று அமைந்திருந்தது. முசுகுந்தன் என்னும் சோழமன்னன், வானோர் தலைவனாகிய இந்திரனுக்குப் போர்த் துணையாகச் சென்று அசுரருடன் போர் செய்தபொழுது, அம்மன்னனுக்கு அசுரர்களால் நேர இருந்த பெரிய இடையூற்றைப் போக்கிய பூதமானது, இந்திரனது கட்டளையால் தேவரு லகத்தினின்றும் க்காவிரிப் பூம்பட்டினத்திற்போந்து மேற்குறித்த பலி பீடத்தில் இந்நகரத்தார் தரும் பலியையேற்று அவர்களுக்கு மேன்மேலும் வெற்றியைத் தந்து விளங்கிய தெனவும், சோழன் மரபினர் முற்காலத்தில் அசுரரால் தேவர்கட்கு உண்டாகிய துன்பங்களை நீக்கி வானோர் நகராகிய அமராபதியைக் காத்தமையால் அவர்களுக்கு இந்திரனால் மகிழ்ந்தளிக்கப் பெற்ற தெய்வத் தன்மை வாய்ந்த ஐவகை மன்றங்கள் இப்புகார் நகரத்தே கொண்டுவந்து அமைக்கப்பெற்றிருந்தன எனவும், இங்ஙனம் தம் நாட்டு வேந்தராகிய சோழர்க்குப் பலவகை யாலும் உதவி புரிந்த இந்திரனை நன்றியுடன் போற்றுமுகமாகப் புகார் நகர மக்களால் இந்திர விழா நெடுங்காலமாகக் கொண்டாடப் பெற்றதெனவும், அவ்விழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்துச் சித்திரை விண்மீன் கூடிய பூரணை நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாள் நிகழ்வதெனவும், சேர முனிவ ராகிய இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்திற் குறித்துள்ளார்.

பெயர்க் காரணம்

பரதகண்டத்தை யுள்ளடக்கிய நாவலந் தீவினைக் காக்கும் தெய்வமாய் மேருமலையின் உச்சியில் தோன்றிய சம்பு என்ற தெய்வம், முற்காலத்தில் அரக்கர்களால் இந்நிலத்தார்க்கு உளவாகும் துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்றிசைக்குப் போந்து இந்நகரத்தே தவஞ் செய்திருந்தமையால் இவ்வூர்க்குச் சம்பாபதி என்ற பெயர் உண்டாயிற்று எனவும், சூரிய குலத்திலே தோன்றிய காந்தன் என்ற மன்னன் தன் நாட்டிற்குத் தண்ணீர்