உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

66

“ திருவின் செல்வியொடு பெருநில மடந்தையை ஒருதனி யாண்ட செருவடு திண்டோள் கரிகாற் பெரும்பெயர்த் திருமா வளவனைப் பாலை பாடிய பரிசிலன் றெடுத்த

மாலைத் தாகிய வளங்கெழு செல்வத்து ஆறைந் திரட்டியும் ஆயிரங் குடிகளும் வீறுசால் ஞாலத்து வியலணி யாகி உயர்ந்தோ ருலகிற் பயந்தரு தானமும் இல்லது மிரப்பு நல்லோர் குழுவும் தெய்வத் தானமும் திருந்திய பூமியும் ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும் விண்ணவர் உலகின் நண்ணிடு நகரமொடு எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த "

143

என வரும் அடிகள் காணப்படுதலைச் சிலப்பதிகாரப் பதிப்பாசிரிய ராகிய பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாதையர வர்கள் அடிக் குறிப்பிற் குறித்துள்ளார்கள். காவிரிப் பூம்பட்டினத்தின் பண்டைக் கால அமைப்பினை விளக்கும் இத்தொடர்களை இளங்கோவடிகள் வாக்கெனத் திட்டமாகக் கொள்ள முடியவில்லை. எனினும், இவற்றிற்குறிக்கப்பட்டுள்ள செய்திகள் இப்புகார் நகரத்தின் பழைய அமைப்பினை உள்ளவாறு விளக்கும் முறையில் அமைந் திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும். அக்காலத்தில் காவிரிப் பூம்பட்டினத்தில் அறுபதினாயிரம் குடும்பங்கள் வாழ்ந்தன என்றால் அந்நகரத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய முந்நூறாயிரத் திற்கு மேலிருக்குமெனக்கருதுதல் பொருந்தும். சுருங்கக் கூறுவோமானால், இக்காலத்தில் நம் தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினை யொத்த பரப்பும் செல்வ வளமும் மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய நம் காவிரிப்பூம்பட்டினம் எனக் கூறுதல் பொருந்தும்.

கடல்கோளால் சிதைந்த மருவூர்ப்பாக்கம்

இவ்வாறு கடைச்சங்க காலத்தில் நாற்காதப் பரப்புடைய தாய் விளங்கிய இப்புகார் நகரம் கிள்ளி வளவன் காலத்தில் இந்திர விழாக் கொண்டாட மறந்தமையால் கடல் கோளாற்