உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

சிதைவுற்ற தென மணிமேகலை கூறுகிறது. இக்கடல் கோளால் இந்நகரம் முழுவதும் அழியவில்லை யென்பதும் இதன் கிழக்குப் பகுதியாகவிருந்த மருவூர்ப்பாக்கமே கடலாற் கொள்ளப் பட்டிருத்தல் வேண்டு மென்பதும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழிலக்கியங் களையும் இந்நகரப் பகுதியில் அமைந்த ஊர்ப் பெயர்களையும் பிற வரலாற்றுக் குறிப்புக்களையும் ஒப்பு நோக்குங் கால் நன்கு விளங்கும்.

66

செந்நெலஞ் செறுவின் அன்னந்துஞ்சும் பூக்கெழுபடப்பைச் சாய்க்காட்டன்ன”

எனவும்,

அகம், 73

"நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க்கானம்"

அகம், 220

எனவும் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்ற பழம்பதி யாகிய சாய்க்காடு என்பது இப்புகார் நகர எல்லையுள் அமைந்த தேயாகும். இவ்வூர் புகார் நகரத்தின் ஒரு பகுதியே என்பதனை, "தண்புகார்ச் சாய்க்காட் டெந்தலைவன்"

எனவும்,

“காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி”

எனவும் வரும் திருஞானசம்பந்தர் திருப்பதிகத் தொடர் களால் நன்குணரலாம். சாய்க்காட்டிலுள்ள திருக்கோயிலின் தெற்கே கால் மைல் தூரத்தில் புகார் நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயில் அமைந்திருத்தலை இன்றும் காணலாம். சம்பாபதி கோயிலுக்குக் கிழக்கே காவிரியின் கரையோரம் அமைந்த பூவனம் மணிமேகலையிற் குறிக்கப்பட்ட பழைய உவவனமாகும். சாய்க்காட்டினை யடுத்து இக்காலத்தில் வெள்ளையனிருப்பு என வழங்கும் இடம் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்ட வால்வளை மேனி வாலியோனாகிய பலதேவன் கோயில் இருந்த

மணிமேகலை. 25.176 - 200