உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

145

ரு

இடமாகும். இதனையொட்டிப் பல்லவனீச் சரத்திற்குக் கிழக்கே கால்மைல் அளவிலுள்ள திருமால் கோயில் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட மணிவண்ணன் கோட்டமாகும். காவிரியின் தென் கரையில் திருவலம்புரத்திற்குக் கிழக்கேயுள்ள வாணகிரி என்ற ஊர், பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப் பாலையில் "இரு காமத்திணையேரி” என்ற தொடர்க்கமைந்த உரைப்பகுதியில் நச்சினார்க்கினியர் பிற வுரையாசிரியர்கள் கூறும் உரை விகற்ப மாகக் குறித்த வளகாமரேரி வணிகாமரேரி என்னும் இரண்டனுள் வணிகாமரேரியாக இருத்தல் கூடும். அவ்வூரின் மேற்கிலும், திருவலம்புரத்தின் தெற்கிலும் அமைந்த சங்கந்தங்குளம் என்ற இடம் மேற்குறித்த உரைப்பகுதியில் நச்சினார்க்கினியர் மற்றொரு சாரார் கூற்றாகக் குறித்த சங்கிராமகாமம் வணிக்கிராமகாமம் என்னும் இரண்டனுள் சங்கிராமகாமம் என்ற ஏரியாக இருத்தல் கூடும். திருவலம்புரத்தின் வடக்கே காவிரியின் வட கரையில் உள்ள மணிக்கிராமம் என்ற ஊர் இப்புகார் நகரத்திலிருந்து வெளிநாடுகளிற் சென்று வணிகம் புரிந்த வணிகர் குழுவினர் வாழ்ந்த இடமாகும்.

கடலுள் மூழ்கிய கோயில்

காவிரி கடலிற் கலக்குமிடத்தில் அமைந்த கடற்பகுதியில் இங்கு வாழும் பரதவர்கள் “கப்ப கரப்பு” என ஒரு இடத்தைக் குறிக்கின்றனர். இப்பகுதியில் ஒரு காலத்தில் துறைமுகம் அமைந்திருந்ததாகவும் பெரும் புயலடித்தபொழுது அப்புயலிற் சிக்கிய கப்பலொன்று அவ்விடத்தில் அமிழ்ந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். “நெய்தலங்கானல் நெடியோய்" என இளஞ்சேட் சென்னிக்குரியதாகப் புறநானூற்றிற் குறிக்கப்பட்ட ஊர், இப்பொழுது காவிரிப்பூம்பட்டினத்தின் வடக்கே கடற்கரையை யடுத்து நெய்தவாசல் என வழங்குகிறது. “கைதைவேலி நெய்தலங்கானல்" என இளங்கோவடிகளாற் குறிக்கப்பெற்ற இப்பகுதி, அடிகள் காலத்தில் சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய தீர்த்தங்களையும், காமவேள் கோட்டத்தையும் தன்பாற்கொண்டு விளங்கியது. இந்நெய் தலங்கானலை உள்ளிட்ட மருவூர்ப்பாக்கமாகிய கிழக்குப்பகுதி, கிள்ளிவளவன் காலத்தில் கடல் கோளால் அழிந்து மறைந்தமை

66