உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

இவ்வுலக மக்கள் மேற்குறித்த மூன்று குளங்களிலும் நீராடி இறைவனை வழிபட்டு இம்மை மறுமையாகிய இருமையின் பங்களுடன் ஈறிலாவின்பமாகிய வீடு பேற்றினையும் ஒருங்கு பெறுதற்குரிய நல்வாய்ப்பினையும் வழங்கியுள்ளார்கள் எனக் கருதவேண்டியுள்ளது.

66

கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோமகுண்டஞ் சூரியகுண்டத் துறை மூழ்கிக் காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு தாமின் புறுவ ருலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்”

(சிலப்.- கனாத்திரம் -57-62)

எனத் தேவந்தி கண்ணகிக்குக் கூறுவதாக அமைந்த இவ்வடிகளில், இளங்கோவடிகள் குறித்த இவ்விரு தீர்த்தங்களின் சிறப்பையும் நன்குணரலாம். கடலொடு காவிரி சென்று சேரும் இடத்திலமைந்த இத்தீர்த்தங்களை நன்னெடும் பெருந் தீர்த்தம் எனப் போற்றுவர் சேக்கிழார்.1 இவை கடலாற்கொள்ளப்பட்ட நிலையில் திருவெண்காட்டிலுள்ள முக்குளங்களில் மூழ்கி இறைவனை வழிபட்டோர் அடையும் பயன்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துவன

66

எனவும்,

1.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்த் தோய்வினை யாரவர் தம்மைத் தோயாவாந்தீவினையே”

சென்னிவெண்குடை நீடநபாயன்

திருக்குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்

மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு

வயல் வளந்தர இயல்பினிலளித்துப்

பொன்னி நன்னதி மிக்க நீர்பாய்ந்து

புணரிதன்னையும் புனிதமாக்குவதோர்

நன்னெடும் பெருந்தீர்த்தமுன்னுடைய நலஞ் சிறந்தது வளம் புகார் நகரம்.

(பெரிய - இயற்பகை - 1)