உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

147

இக்கடற் பகுதி பழைய கட்டிடங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாய் பாசி படிந்திருத்தலால் இங்கே மீன்கள் நிறையத் தங்குகின்றன எனப் பரதவர் கூறுகின்றனர். கரையிலிருந்து ஏழுமைல் அளவில் இக்கடற் பகுதியில் கட்டுமரத்திற் சென்று பார்த்தால் பழைய கோயிற் கோபுரத்தின் உச்சி நான்குபாக அளவில் தட்டுப்படுவதாகவும் பதினேழுபாக அளவில் அடித்தளம் தட்டுப்படுவதாகவும் இவ்விடத்தை யடுத்துச் சுமார் நூறடி அளவில் கோயிலின் சுற்றளவு தெரிவதாகவும் இங்கே மீன் பிடிக்கும் பரதவர்கள் அடையாளத்துடன் காட்டுகின்றனர். அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்திற் சென்று ஆராய்ந்தால் கடல்கொண்ட காவிரிப்பூம்பட்டினத்தில் முற்காலத்திலிருந்த கட்டிடங்களில் ஒருசிலவற்றையேனும் நாம் இக்காலத்தில் கண்டு மகிழ முடியும். சென்னை யரசும் இந்திய அரசும் புதை பொருளாராய்ச்சித்துறையின் வழியாக இதற்கான ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து நிறைவேற்றுதல் வேண்டும்.

இணைந்த ஏரிகள்

இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய காம இன்பத் தினைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகளாகப் பட்டினப் பாலையிற் குறிக்கப்பட்ட இரு குளங்களும் கடலொடு காவிரி கலக்கும் இடமாகிய சங்கமுகத்துறையில் நெய்தலங் கானல் என்ற சோலையில் காமவேள். கோயிலுடன் அமைந்தன வாக இளங்கோவடிகளாற் குறிக்கப் பட்ட சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் பெயருடைய இரண்டு தீர்த்தங்களே என்பது நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் ஆகிய பழைய உரையாசிரியர்களின் துணிபாகும். நீராடினார்க்கு இம்மை மறுமை இன்பங்களை அளிக்கும் பெருமை வாய்ந்தனவாகிய இவ்விரு குளங்களும் அடுத்துள்ள காமவேள் கோட்டத்துடன் கடலால் கொள்ளப்பட்டு மறையவே, அக்காலத்துள்ள புகார் நகர மக்கள் இவற்றை நினைவு கூர்ந்து நீராடிப் பயன் பெறுங் கருத்துடன் இம்மை மறுமைக்குரிய இவ்விரு குளங்களுடன் அம்மையாகிய வீடு பேற்றினை யளிக்கவல்ல அக்கினி தீர்த்தம் என்ற மற்றொரு தீர்த்தத்தையும் சேர்த்துத் திருவெண்காட்டுத் திருக்கோயிலில் முக்குளங்களாக அமைத்தனர். இதனால்