உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

66

151

தண்முத்தரும்பத் தடமூன்றுடையான் தனையுள்கிக் கண்முத்தரும்பக் கழற்சேவடி கைதொழுவார்கள் உண்முத்தரும்ப உவகைதருவான் ஊர்போலும் வெண்முத்தரும்பிப் புனல்வந்தலைக்கும் வெண்காடே' எனவும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் அருளிய திருப்பாடல்கள். இளங்கோவடிகளும் திருஞான சம்பந்தரும் குறித்த இத் தீர்த்தங்களின் சிறப்பை ஒப்புநோக்கிச் சிந்திப்போ மானால் முற்காலத்தில் கடலுள் மறைந்த சோம குண்டம், சூரியகுண்டம் ஆகிய இரு தீர்த்தங் களுக்கும் இக்காலத்தில் திருவெண் காட்டுத் திருக்கோயிலிலுள்ள சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற முக்குளங் கட்கும் உள்ள ஒற்றுமைத் திறம் நன்கு விளங்கும்.

66

புகாரில் அமைந்த கோயில்கள்

"அமரர் தருக்கோட்டம், வெள்யானைக்கோட்டம். புகர்வெள்ளை நாகர்தம்கோட்டம். பகல்வாயில் உச்சிக்கிழான்கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம், புறம்பணையான் வாழ்கோட்டம். நிக்கந்தக்கோட்டம், நிலாக்கோட்டம்”

(சிலப்.- கனாத்திறம் - 9-13)

எனவும், “மணிவண்ணன் கோட்டம்” “இந்திர விகாரம்” (சிலப். நாடுகாண்) எனவும் குறிக்கப் பட்ட இக்கோயில்கள் யாவும் காவிரிப்பூம்பட்டினத்தே அமைந்திருந்தன என இளங்கோவடிகள் குறிப்பிடுவர். இவற்றுள் “அமரர் தருக்கோட்டம்" என்பது தேவருலகத்திலுள்ள கற்பகத்தருவை வழிபடும் நிலையில் அமைந்த கோயிலாகும். இதனைச் “சாந்திகரைக்கோட்டம் எனினும் ஆம்” என அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடுதலால்,

க்கோயில் கடற்கரை யருகே அமைந்திருந்ததெனத் தெரிகிறது. வெள்ளைநாகர் என்பது பலதேவர்க்குரிய பெயராகும். பல தேவர்க்குரிய கோயில் இருந்த இடம் இக்காலத்தில் “வெள்ளை யனிருப்பு” என வழங்குகிறது.

பகல்வாயில்-பகல் (கதிரவன்) தோன்றுகின்ற வாயில்; அதாவது கீழ்த்திசை. உச்சிக்கிழான்-சூரியன். இந்நாட்டை