உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

ஆட்சிபுரிந்த சோழ மன்னர்க்குக் குல முதல்வனாகிய சூரியனை வழி படுதற்கமைந்த திருக்கோயில்.

66

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு

எனத் திருமுருகாற்றுப்படையில் அமைந்த தெய்வக் காட்சியைப் புலப்படுத்தும் முறையில் சோழர் தலைநகராகிய இக்காவிரிப் பூம்பட்டினத்தின் கீழ்த்திசையில் கடலோரத்திலே நிலை பெற்றிருந்த தென்பது அடியார்க்கு நல்லார் உரையால் நன்கு விளங்கும்.

ஊர்க்கோட்டம் என்பது இறைவன் எழுந்தருளிய “ஸ்ரீகைலாயம் நிற்கும் கோயில்" என அரும்பதவுரை யாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தெளிவாகக் குறித்துள்ளார்கள். எனவே பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்குரிய திருக்கோயில் காவிரிப்பூம்பட்டினமாகிய இம்மூதூரில் நடுநாயக அமைந்திருந்ததென்பது நன்கு புலனாதல் காணலாம்.

மாக

கடல் கொண்டெஞ்சிய நிலையில் இப்போதுள்ள காவிரிப் பூம்பட்டினம் என்ற பெயர்க்குச் சிறப்புரிமையுடையதாக விளங்கும் நிலப்பகுதியில் நடுநாயகமாகத் திகழ்வது சிவபெருமான் வீற்றிருந்தருளும் பல்லவனீச்சரம் என்ற திருக்கோயிலேயாகும். வேற்கோட்டம் என்பது முருகப்பெருமான் எழுந்தருளிய திருக்கோயில். இது முற்காலத்தில் தனிக் கோயிலாக இருந்து மறைந்த நிலையில் அறுமுகப்பெருமான் வழிபாடு சிவபெருமான் திருக்கோயில்களில் இடம் பெறுவதாயிற்று.

வச்சிரக்கோட்டம் என்பது, இந்திரனது படைக்கலமாகிய வச்சிராயுதத்தை வைத்து வழிபடும் கோயிலாகும். இக்கோயிலில் வெற்றி முரசம் ஒன்று வைக்கப்பெற்றிருந்த தென்றும், இந்திர விழாச் செய்யக் கருதிய இவ்வூர் மக்கள் நாளங்காடியிலும் ஐவகை மன்றங்களிலும் பலியிட்டு வச்சிராயுதம் நிற்கும் கோயிலாகிய இவ்விடத்திலுள்ள முரசினைப் பட்டத்து யானையின் மேலேற்றிக் கொண்டு ஐராவதமாகிய வெள்ளை யானையின் கோயிலிற் சென்று இந்திரனுக்குச் செய்யவிருக்கும் விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவித்துக் கற்பகத்தரு