உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

வானோர் வந்தழைக்க விண்ணக மாந்தர்க்கு விருந்தாய்ப் புக்கதும், அதனைக் கேட்டறிந்த சேரன்செங்குட்டுவன் என்னும் வேந்தர் பெருமான் தனது நாட்டிற் புகுந்த பத்தினிக் கடவுளாகிய அவ்வன்னைக்கு இமயத்திலிருந்து கற்கொணர்ந்து திருவுருவமைத்து வஞ்சிமா நகரிற் கோயில் கட்டிக் கடவுள் மங்கலஞ் செய்ததும், அவ்விழாவிற்கு வந்திருந்த மன்னர் களாகிய குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், கடல்சூழ் இலங்கைக்கயவாகுவேந்தனும் கண்ணகி தேவியை வேண்டித் தத்தம் நாட்டில் கோயில் கட்டி வழிபாடியற்றியதும், இவற்றை யெல்லாம் நேரிலுணர்ந்த சேர முனிவராகிய இளங்கோவடிகள் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குச் செந்தமிழ்க் காப்பிய மாகிய சிலப்பதிகாரம் என்னும் செஞ்சொற் கோயில் அமைத்து வழிபட்ட திறம் ஆகியவை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த பழைய வரலாற்று நிகழ்ச்சிகளேயாகும்.

66

" இவளோ,

கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணி”

எனக் கொற்றவையாகிய தெய்வமும்,

66

(சிலப். வேட்டுவவரி, 47-50)

“ என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக்கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்”

(சிலப். அடைக்கலக், 137-144)

எனக் கவுந்தியடிகளாகிய தவச் செல்வியும் உளமுவந்து

பாராட்டிப் போற்றிய கண்ணகி என்னும் கற்புடைத் தெய்வம்