உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

169

பிறந்த சகோதரர்களாவர். தம் இளம் பருவத்திலேயே தன் தாய்ப்பாட்டன் ஆட்சிபுரிந்த சோழநாட்டின் தலைநகரமாகிய இப்புகார் நகரத்திற் பல்வேறு இடங்களையும் சென்று கண்டு இந்நகரப் பெருமக்களுடன் நெருங்கிப் பழகியவர் இளங்கோ அடிகள். புலமைச் செல்வராகிய அம்முனிவர் இறைவன் எழுந் தருளிய இமயமலை, அகத்திய முனிவர் இருப்பிடமாகிய பொதியமலை என்னுந் தெய்வத் தலங்களுடன் தவச் செல்வர்கள் வாழும் இப்புகார் நகரத்தையும் இணைத்துப் போற்று முகத்தால் இப்புகார் நகரம் நெடுங்காலம் அழியாது நிலை பெறுக என வாழ்த்துவதல்லது இந் நகரத்திற்கு ஒடுக்கங் கூறுதல் ஒண்ணாது எனச் சிலப்பதிகார நூன்முகத்தே மங்கல வாழ்த்துப் பாடலில் தம் மனக் கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.

66

ஆங்கு,

பொதியி லாயினும் இமய மாயினும்

பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே”

(சிலப். மங்கல், 13-19)

எனவரும் மங்கல வாழ்த்துப் பகுதியில் செந்தமிழ்ப் புலமை நலம் வாய்ந்த முனிவராகிய அவ்வடிகளாற் போற்றி வாழ்த்தப் பெற்ற இப்புகார் நகரம், கடல் கோள் முதலிய இயற்கை மாற்றங்களால் மேலும் சிதைவுறாது அதன் ஒரு பகுதியை யேனும் நம்மனோர் கண்டு மகிழும் நிலையில் நிலை பெற்றிருப்பது, நம் தமிழ் மக்களது தவப்பேறேயாகும். கடல்கோளுக்குத் தப்பிய நிலையில் எஞ்சியுள்ள இந்நகரப் பகுதியும் பிற்காலத்தில் ஏற்பட்ட போர் முதலிய அரசியல் மாறுபாடுகளாலும் உரிமையிழந்த நிலையில் நாட்டுமக்களது விழிப்பின்மையாலும் தன்கண் அமைந்த அரண்மனைகளும் கோயில்களும் மாடமாளிகைகளும் சிதைந்தொழியப் பிற்காலத்தில் தனது தொன்மையுருவம் மாறிப் பொலிவிழந்து காணப்படுவதில் வியப்பொன்றுமில்லை.