உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

175

11. எண். 261. மூன்றாம் இராசராச சோழன் தனது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் பிடாரன் நாயகன் வேண்டிக் கொண்டவாறு பராதீனப்பட்டுக் கிடந்த தேவதான நிலங்களை வாங்கி இராசராசன் திருநந்தவனம் அமைக்கும்படி கூறிய கட்டளையினைத் திருமந்திர வோலை பண்டித சோழ மூவேந்த வேளாண் அறிவித்த உத்தரவாக அமைந்தது இக்கல்வெட்டு.

பல்லவனீச்சரம்

1.எண்.272. முதல்மாற வர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சியில் 17-ஆம் ஆண்டிற் பல்லவனீச்சரத் திருக்கோயிலிற் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளது. இது கோயிலுக்கு நிலம் அளித்த செய்தியைக் கூறுவதாகும்.

2. எண். 273. பிற்காலத்தில் வரையப்பெற்ற இக்கல்வெட்டு சாலிவாகன சகம் கலி 4775 ஜய வருடம் ராயரவுத்தமிண்ட நாயனார் முதலியோர், திருச்சாய்க்காட்டூர்ச் சீமை காவிரிப் பூம்பட்டினம் மாகாணம் காவிரிப்பூம்பட்டினம் பல்லவனீச்சுரர் கோயிலுக்கு வழிபாட்டுக்கும், திருவிழாவிற்கும், திருப்பணிக்கும் ஆக நிலம் வழங்கிய செய்தியைத் தெரிவிப்பதாகும்.