உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1 நிலத்தைப் பயிரிட்டு வந்த தேவதானக் குடிகள் இம்மன்னனது ஆட்சியின் 17-ம் ஆண்டு முடியவுள்ள நிலவரிப் பாக்கியைக் கொடாமையால் 18-ஆம் ஆண்டில் வாணகோ வரையன் தெரிவித்துக் கொண்டவாறு குடியுரிமையை இக்கோயிலுக்கே மாற்றியமைத்ததாக இராசநாராயண மூவேந்த வேளான் என்ற திருமந்திரவோலை அதிகாரியின் கையெழுத்திட்ட ஆணை வந்தமையைத் தெரிவிப்பது இக்கல்வெட்டாகும்.

7. எண். 268. இம்மன்னனது ஆட்சியில் 27-ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற இக்கல்வெட்டில் சாய்க்காட்டுத் திருக்கோயிலில் உச்சிக்காலத்தில் அந்தணர்க்கு உணவளிப்பதற்கு நிலம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது. 8. எண். 262. இம்மன்னனது ஆட்சியில் 35-ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காலிங்கராயன் என்பான் திருச்சாய்க்காட்டுத் திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் கிடைக்கக் கூடிய நெல்லில் நாள்வழிபாட்டிற்கும் திருப் பணிக்கும் பிற செலவுகளுக்கும் இவ்வளவு இவ்வளவு கொடுக்கவேண்டுமென அனுப்பிய உத்தரவு இடம் பெற்றுள்ளது.

9. எண். 266. மூன்றாங்குலோத்துங்கனது ஆட்சியில் 35- ஆம் ஆண்டில் வரையப்பெற்ற இக்கல்வெட்டு சிதைந்து காணப் படுகிறது. இது, திருச்சாய்க்காட்டு வேளானாகிய உத்திராபதி நாயகன் என்பான் சாயாவன நாழியால் நாள் ஒன்றுக்கு எட்டு நாழி மிளகு கோயிலுக்கு அளந்து வருவதற்கு அவனிடம் குத்தகையாகக் கோயிலார் நிலமும் வீடும் அளித்த செய்தியைக் கூறுவதாகும்.

66

10. எண். 263. மூன்றாம் இராசராச சோழனது ஆட்சியில் 5-ம் ஆண்டிற் பொறிக்கப் பெற்ற இக்கல்வெட்டு இராசாதிராச வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டு மருதமங்கலமுடையான் மலைமேல் மருந்து" ஆகிய வானவன் விழுப்பரையன் என்பான் பெரிய தேவரது (மூன்றாங் குலோத்துங்கனது) ஆட்சியில் ஏழாம் ஆண்டில் திருச்சாய்க்காட்டுக் கோயிலுக்கு 1/2 நுந்தாவிளக்கு எரிப்பதற்கென நிலம் அளித்தவன், அதனோடு மேலும் 1/2 விளக்கு எரிப்பதற்கென நிலம் விட்ட செய்தியைக் கூறுவதாகும்.