உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

173

திருக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களும் படியெடுக்கப் பெற்றுள்ளன.

திருச்சாய்க்காடு

1. எண் 271. விக்கிரமசோழனது ஆட்சியில் மூன்றாம் ஆண்டில் சாயாவனக்கோயிலிற் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளது. அதன் கண் “திருச்சாய்க்காடு யார்” கங்கைகொண்ட சோழ அரையன் என்ற தொடர்கள் மட்டும் தெளிவாகக் காணப்படுகின்றன.

2.எண். 269. செய்யுள் வடிவிலுள்ள இக்கல்வெட்டு விக்கிரம சோழனது ஆட்சியில் ஐந்தாம் ஆண்டில் பொறிக்கப் பெற்றதாகும். இதன் கண் சாய்க்காடு “புகார் நகரத்துச்சாயை” எனக் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். விக்கிரம சோழனுடைய அமைச்சருள் ஒருவனாகிய முகுந்தையர் அதிபதி திருச்சிற்றம் பலவன் என்பான் திருச்சாய்க்காட்டில் ஒரு திருமடம் அமைத்து அந்தணர் ஐம்பதின்மர்க்கு உணவளிப்பதற்கு நிலம் வழங்கிய செய்தியைக் குறிப்பது இக்கல் வெட்டாகும்.

3. எண். 367. விக்கிரம சோழனது ஆட்சியில் ஒன்பதாம் ஆண்டில் வரையப்பெற்ற இக் கல்வெட்டில் அவனது மெய்க் கீர்த்தி மட்டும் சிதையாதுளது.

4. எண். 270. செய்யுள் வடிவில் அமைந்த இக் கல்வெட்டு விக்கிரமசோழன் காலத்தில் பொறிக்கப்பட்டதாக இருக்கலாம். குணாகரன் என்பான் சாயாவன நாயகர்க்கு வழிபாட்டுப் புறமாக நிலமளித்த செய்தியைத் தெரிவிப்பது இச்செய்யுளாகும்.

5.எண்.265.மூன்றாங் குலோத்துங்கன் ஆட்சியில் ஐந்தாம் ஆண்டில் வரையப்பெற்ற இக்கல்வெட்டின் கற்கள் முறை பிறழ்ந்து அடுக்கப் பட்டுள்ளமையால் இதில் குறித்த செய்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதன்கண் “ராஜாதி ராஜ வளநாட்டு நாங்கூர் நாட்டுக் காவிரிப் பூம்பட்டினம்" என்ற தொடர் காணப்படுகிறது.

66

6. எண். 264. இவ்வேந்தனது ஆட்சியில் 18ஆம் ஆண்டில் வரையப்பட்ட இக்கல்வெட்டில் திருச்சாய்க்காட்டுத் திருக்கோயில்