உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

இடைப்பகுதியில் இப்புகார் நகரத்தில் செல்வம் நிறைந்த வணிகர் குடியிற்பிறந்த திருவெண்காடர் என்னும் பெரியார் இறைவனது திருவருட்டிறத்தினை உள்ளவாறு உணர்ந்து,

66

'பாரனைத்தும் பொய்யெனவே

பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆருந்துறக்கை யரிதரிது”

எனச் சான்றோர் வியந்து போற்றும் வண்ணம் தம்பாலுள்ள பெருஞ் செல்வத்தைத் துறந்து பதினோராந் திருமுறையிலுள்ள கோயில் நான்மணிமாலை முதலிய அருட்பனுவல்களைப் பாடி இறைவனது திருவருட்பண்பையும், அவனுக்கு ஆட்பட்ட மெய்யடியார்களது பெருமையினையும் புலப்படுத்தி இறைவன் திருவடிநீழலிற் கலந்த வரலாறு யாவரும் அறிந்ததேயாகும்.

கல்வெட்டுக் குறிப்புகள்

கி.பி.பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு முடிய அமைந்த பிற்காலச் சோழராட்சியிலும் இந்நகரத்தின் பழம் பெருமை ஓரளவு பேணப்பெற்று வந்தமை யறியலாம். இந்நகரிற் பிறந்த வணிகர்கள் மணிக் கிராமத்தார் என்ற பெயருடைய ஒரு குழுவினராய்த் தம்முள் ஒன்றுகூடிக் கடல் கடந்து சென்று கீழ்த் திசையிலுள்ள கடாரம், சாவகம் முதலிய புறநாடுகளில் வாணிகம் புரிந்து பொருளீட்டி அறம்பல செய்து வந்தமை, அப் புறநாடுகளிலும் நம்நாட்டு ஊர்களிலும் காணப் படும் கல்வெட்டு முதலிய வரலாற்றுச் சான்றுகளாலும் இந்நகரத்தில் அவ்வாணிகக் குழுவினர் வாழ்ந்த இடம் மணிக்கிராமம் என்ற பெயருடன் இந்நாளிலும் வழங்கப் பெறுதலாலும் நன்கு துணியப்படும். கடைச்சங்க காலத்தில் புகார் நாட்டின் தலையூராக விளங்கிய காவிரிப்பூம் பட்டினம் மூன்றாங் குலோத்துங்க சோழன் முதலிய சோழ மன்னர் ஆட்சிக் காலத்தில் "இராசாதிராச வளநாட்டு நாங்கூர் நாட்டுக் காவிரிப்பூம்பட்டினம்" எனக் கல்வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளது.

தென்னிந்திய கல்வெட்டாராய்ச்சித்துறையினரால் 1911- ஆம் ஆண்டில் இப்புகார் நகரத்திலுள்ள திருச்சாய்க்காட்டுத் திருக்கோயிலில் பதினொரு கல்வெட்டுக்களும் பல்லவனீச்சரத்