உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

“பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரம்”

“பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரம்'

66

காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெல்லா முணரப் பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவனீச்சரம்"

171

எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடற் றொடர்களால் இப்புகார் நகரத்தில் உயர்ந்தோர் உண்மையும் இந் நகர்க்கு

ஒடுக்கங் கூறாமையும் போற்றப்படுதல் காணலாம்.

66

எனவும்,

66

' போரார் வேற்கண்மாதர் மைந்தர் புக்கிசை பாடலினாற் பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே"

தண்டுடுக்கை தாளம்வீணை சாரநடம் பயில்வார் பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே”

எனவும் வரும் தேவாரத் தொடர்கள் சிலப்பதிகார காலத்து இசை நாடக வளர்ச்சியையொட்டித் திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்தும் இந்த நகரத்தில் இசையும் நாடகமும் ஆகிய கலைத்துறைகள் வளர்க்கப்பெற்ற திறத்தை நன்கு அறிவுறுத்தல் காணலாம்.

புகாரில் பிறந்த அருட்செல்வர்கள்

தேவார ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தை யொட்டி இப்புகார் நகரத்தில் அருட்செல்வர் பலர் தோன்றி இறைவனது ருவருட்டிறத்தை உலக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய்,

"இல்லையே யென்னாத இயற்பகைக்கும் அடியேன்”

எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளாற் போற்றப் பெற்ற இயற்பகை நாயனார் என்னும் பெரியார் இப்புகார் நகரத்திலே செல்வம் நிறைந்த வணிகர் குடியிற் பிறந்து சிவனடியார் வேண்டுவன வெல்லாம் இல்லையென்னாதளித்துத் தம் வாழ்க்கைத்துணைவி யாருடன் சிவபெருமானது திருவடி நீழலெய்தி இன்புற்ற வரலாறு திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின்