உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

177

பிற்சேர்க்கை 1

கழாஅர் முன்றுறை

கழாஅர் முன்றுறை என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் மேற்கே அமைந்த காவிரித்துறையாகும். இப்பெயர் இக்காலத்தில் கழுதகாரன்துறையென மருவி வழங்குகிறது. புகார் நகர மக்கள் நீராட்டு விழாவினைச் சிறப்புற நடத்தும் வாய்ப் புடையதாக அமைந்தது இக்கழா அர்த் துறையேயாகும். புகார் நகர மக்கள் இத்துறையில் நீராடச் செல்லுதற்கென அமைந்த திருமஞ்சனப் பெருவழியைத் தண்பதப் பெருவழி எனக் கூறுவர் இளங்கோவடிகள். காவிரிக்குக் கரையெடுத்த கரிகால் வளவன் முதன்முதல் புதுப் புனலாட்டு விழாவை இத்துறையி லேயே நிகழ்த்தினான் என்றும், இவன் மகள் ஆதிமந்தியை மணந்த ஆட்டனத்தி என்னும் சேர அரச குமாரன் இப்புதுப் புனலாட்டு விழாவிற் கலந்துகொண்டு காவிரியில் நீராடிய பொழுது காவிரி வெள்ளத்தால் இழுக்கப்பட்டுக் கடலை யடைந்தான் என்றும் இத்துன்ப நிலையிற் காதலனைக் காணாத ஆதிமந்தி அழுதரற்றிக் கொண்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் என்றும் அந்நிலையில் அவளது பெருந்துயரைக் கண்டு உளம் இரங்கிய மருதியென்னும் நங்கை ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக் காட்டி விட்டுத் தான் நெஞ்சத் துணிவுடன் கடலிற் குதித்து உயிர் துறந்து புகழ் பெற்றாளென்றும் வழங்கும் வரலாறு சங்கச் செய்யுட் களிற் பல இடங்களிலும் பாராட்டிப் பேசப்பெற்றுள்ளது.

கல்லா யானை கடிபுனல் கற்றென

மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக்