உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப் புனனயந்தாடும் அத்தி அணிநயந்து காவிரி கொண்டொளித் தாங்கு மன்னோ-

- பாணர் : அகம். 376

முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண் கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின் ஆட்டனத்தி நலனயந் துரைஇத்

தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்

மாதிரந் தழைஇ மதிமருண்டலந்த

ஆதிமந்தி காதலற் காட்டிப்

படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர் சென்மோ வாழி தோழி-

என்பன அகநானூற்றுப் பாடல்களாகும்.

- பரணர் : அகம். 222.

காவிரி வெள்ளத்தால் இழுக்கப்பட்டுக் கடலிற்புக்க ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக் காட்டிக் கடலிற்புக்கு மறைந்த மருதி யென்னும் மாண்புடை நங்கையின் தன்னலமற்ற தீரச் சயலை வெளிப்படுத்தும் நிலையில் அமைந்த இடமாக க்காலத்து விளங்குவது மருதம்பள்ளம் என்ற பகுதியாகும். மருதிப்பள்ளம் என்ற பெயரே பிற்காலத்தில் மருதம்பள்ளம் என மருவி வழங்குகிறது.

இப்புகார் நகரில் சிவபெருமானுக்குரியனவாக அமைந்த பல திருக்கோயில்களில் ஆலமுற்றம் என்பதும் ஒன்றாகும். முக்கட்செல்வர் எழுந்தருளிய ஆலமுற்றம் என்ற இக்கோயிலைப் பற்றி அகம் 181ல் பரணர் குறித்துள்ளமை காணலாம்.