உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

மாதேவீச்சுரம் என்று தன் பெயர் அமைந்திருக்கக் கூடும். ஆனால், ஸ்ரீ கயிலாயம் என்று பெயர் கொண்டிலங்கு கிறது. பெருமான் பெயரும் ஸ்ரீ கயிலாசமுடைய மகா தேவர், திருக்கயிலாயமுடையார் என்றே காணப்பெறுகிறது. இக்கோயிலுக்கு ஸ்ரீ கயிலாயம் என்ற பெயர் எப்பொழுது ஏற்பட்டது? காரணம் என்ன? இத்தலம் பழமையானதா? அப்படியானால் வேறு பழம் பெயர் உண்டா? அப் பெயர் என்ன? அப்பெயர் தேவாரம் முதலிய திருமுறைகளில் எங்கேனும் காணப்பெறுகிறதா? இவற்றை எல்லாம் முயன்று கண்டறிய வேண்டும். ஆண்டவன் அருளும், அறிஞர்கள் ஆராய்ச்சியும் அதற்குத் துணை புரியட்டும்.

.

அருமையும் பெருமையுமுள்ள இத்தலத்தின் உண்மை வரலாற்றை எழுதி வெளியிட, தேவதானத்தார் ஆர்வம் கொண்டனர். எல்லா வகையாலும் தக்கார் ஒருவரை இசையச் செய்தனர். அவர் தான் சைவத்திருவாளர் திரு.வை. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள். வரலாற்று நூலறிவும், கல்வெட்டு ஆராய்ச்சியும், இலக்கியப் புலமையும், சரித்திரத் தேர்ச்சியும் சமய ஒழுக்கமும், சீரிய பண்பாடும் நிரம்பிய நுண்மான் நுழை புலம் உடையவர். பன்னூல் எழுதிப் பழுத்தவர். இப்பணியை நிறைவேற்ற அவர்களைத் தேர்ந்தெடுத்த ஒன்றே போதும் தேவதானத்தார் கொண்ட உண்மை ஆர்வத்தைப் பலப்படுத்த.

இம்மலர் சிறிதே. சுறுக்கமாக இருப்பினும் விளக்கம் தருகிறது. இச்சிறு மலரிலும் ஆசிரியரின் அறிவு ஒளிர்கிறது. அனுபவம் மணக்கிறது. மேலும் கல்வெட்டுப்படிகள் அனைத்தை அப்படியே வெளியிடலாம். கோயிலின் வரைப் படத்தை விளக்கக் குறிப்புடன் இணைக்கலாம். இப்படி எல்லாம் சொல்வதைக் குறை கூறுவதாகக் கருதி விடப்படாது. நல்லார்வத்துடன் விடுக்கும் வேண்டுகோள் தான் இது.

இந்தப் பவித்திரமான பணியை ஏற்றுச் செவ்விய முறையில் எழுதி உபகரித்த பெரியார்க்கும், இந்த நல்ல முயற்சியில் அக்கறை காட்டிய செம்பியன் மாதேவித் திருக்கோயில் அறங்காவலர் களுக்கும், இறைபணியாளருக்கும் அம்மையப்பன் திருவருள்