உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

66

“ ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளாரான ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழர் திருராஜ்யஞ் செய்தருளா நிற்க தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்டுத்)

இத் திருக்கற்றளிலே(ய்) திருநல்லமுடையாரைத்

193

தருளிவித்து

திருவடி(த்)

தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீ கண்டராதித்த தேவர் இவர்"

- (S.I.I.III-146)

பதி பக்தியும், சிவ பக்தியும் நிறைந்த இப்பிராட்டியார் தான் செம்பியன் மாதேவி என்ற பெயருடன் இன்று விளங்கும் இவ்வூர்த் திருக்கோயிலையும் கற்றளியாக எடுப்பித்தவர். ஆனால் இக்கோயிலை புதிதாகக் கட்டிக் கடவுண் மங்கலம் செய்தார் என்று கொள்வது பொருத்த மில்லை என்பது என் கருத்து. இங்குள்ள திருக்கோயில் பழமையானதாகவே இருக்க வேண்டும். சமய குரவர்களின் பாடலும் இதற்கு இருந்திருக்கலாம். ஆகவேதான் அப் பெருமாட்டிக்கு இதைக் கற்றளியாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். அதன் பின்னர் இவ் ஊரைச் சார்ந்த நிலபுலங்களை இறையிலியாக ஆக்கி அவற்றை அந்தணர்கட்கு அளித்துக் காத்திருக்கிறாள். அதன் காரணமாக இவ்வூருக்கு செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இப் பெருமாட்டி கற்றளியாக எடுப்பித்திருக்கும் மற்ற திருக்கோயில்கள் யாவும் பாடல் பெற்ற பழம் பெரும் திரு க்கோயில்களே, இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடை யார் கோயிலும் தஞ்சைத் தளிக்குளம் என்னும் பாடல் பெற்ற கோயிலேயாகும். இவற்றை எல்லாம் மனத்துட்கொண்டு பார்த்தால் இக் கோயிலும் பாடல் பெற்ற ஒரு பழங் கோயிலாகவே இருக்க வேண்டும் என்பது தெளிவு. அன்றியும் செம்பியன் மாதேவி புதிதாக எடுப்பித்த கோயிலாக இருந்தால் செம்பியன்